என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சூளகிரியில் 3 வது முறையாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

    கிருஷ்ணகிரி, சூளகிரியில் 3 வது முறையாக ஏலம் எடுக்க யாரும் வராததால் கடைகள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி, 

    சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சூளகிரியில் உள்ள தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தை விழாகத்தில் உள்ள கட்டிடம் சார்ந்த கடைகள் 42 ம் மற்றும் டென் அமைத்தும் வைக்கப்பட்ட கடைகள் பல உள்ளது.

     இந்த சந்தை ஏலம்எடுத்து ஒரு ஆண்டு முடிஅடைந்ததால் மறு ஏலம் 28,3, 2022 முதல் ஏலம் பழைய பி,டி, ஒ அலுவலகத்தில் பி, டி, ஒ, சிவகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்டெப்பாசிட் கட்டியவர்கள் முன்னிலையில் ஏலம் விட்டனர்.

    அன்று யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை பின்பு 11, 4, 2022 இரண்டாவது முறை இதே இடத்தில் இதே போல்  ஏலம் விட்டனர். அப்போது ஏலம் கேட்கவில்லை. பின்பு நேற்று மாலை இதே இடத்தில் பி,டி,ஒ, அசோகன் தலைமையில் துணை பி, டி, ஒக்கள் உமாசங்கர், முகிலன் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் ஒரு நபர்க்கு ரூ1, லட்சத்து 50ஆயிரம் வீதம் இருவர் டெப்சிட் கட்டி இருந்தனர்.

     இவர்கள் மத்தியில் ரூ. 34 லட்சத்து 8 ஆயிரத்து 145 க்கு ஏலம் அறிவித்தனர். இந்த முறையும் யாரும் ஏலம் எடுக்க முன் வராததால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு எடுத்து சென்றனர்.அதிகாரிகள் மறுதேதி அறிவிக்காமல் ஏலம் ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×