என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 47). மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது கடையை சோதனைநடத்தினர். அப்போது கடையில்  5.400 கிலோ கிராம் எடையுள்ள குட்கா இருந்தது தெரிய வந்தது. 

    இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து மளிகை கடைக்காரர் பாஸ்கரை மத்தூர் போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘சட்டவிரோதமாக குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். 
    Next Story
    ×