என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையனூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது.
    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொண்டாடப்பட்டது.

    தொடர்ந்து 3 நாள் நடைபெறும் திருவிழாவில் 2&ம் நாளில் மாரியம்மன் கோவிலுக்கு மேளதாளத்துடன் கிராமத்து பெண்கள் கூல் மற்றும் பொங்கல் கூடையை எடுத்து சென்றனர். 

    அப்போது வேடியப்பன் மற்றும் மாரி யம்மன் சிலை கரகம் வீடு வீடாக வலம் வந்தது. அப் போது பக்தர்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சேவா பாரதி அமைப்பின் சார்பில், உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சேவா பாரதி அமைப்பின் சார்பில், உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் டாக்டர் சண்முகவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக  சங்கர சக்தானந்தா சுவாமிஜி, பால தேவா னந்தாபுரி சுவாமிஜி, நிகிலேஷ் அம்ருதா சுவாமிஜி ஆகி யோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

    துணைத் தலைவர் பரமானந்தன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் 300-க்கும் மேற் பட்ட பெண்கள் கலந்துகொண்டு, திருவிளக்குகளை ஏற்றி, உலக நலனுக்காக வழிபாடு நடத்தினர்.
    கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பீரங்கியின் கல் குண்டு வைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு வரலாற்று பொருள் காட்சிக்கு வைத்து வருகின்றனர். அதன்படி, இம்மாதத்திற்கான காட்சி பொருளாக பீரங்கியின் கல் குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 
    இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராசு கூறிய தாவது:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மலைக் கோட்டைகள் உள்ளன. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மகா ராஜ கடை, தட்டக்கல், வீரபத்ரதுர்க்கம், நாகமலை, மல்லி கார்ஜுனதுர்க்கம் ஆகிய மலைகளில் கோட்டைகள் உள்ளது குறிப்பிடத் தக்கவைகளாகும். மண்ணால் ஆன  தரைக்கோட்டைகள் இருந்ததற்கான தடயங் களும் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

    பீரங்கி கல் குண்டுகள் தயாரிக்க உறுதியற்ற கருங்கற்களே தேர்ந் தெடுக்கப்படுகின்றன. ஏனெனில்  அவைதான் பீரங்கி யில் இருந்து வெடிமருந்தின் உதவியுடன் வேகமாக வெடித்து சிதறும் போது எளிதில் பல சிறு துண்டுகளாக உடைந்து பல பேரை ஒரே நேரத்தில் தாக்கும். 
    தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இக்கல்குண்டு சிறிய அளவுடையது. இவை 10 செ.மீ. விட்டமும், 2 கிலோ  எடையும் கொண்டதாகும். இக்கல்குண்டை பொதுமக்கள் பார் வையிட்டு வியப்படைந்து வருகின்றனர்.
     இவ்வாறு அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டணம் 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே  மலையாண்டஅள்ளியைப் சார்ந்தவர் பயாஸ் பாஷா (வயது 40). இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு திண்டுக்கல்  மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணை காதலித்து   13 வருடங் களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் பின்பு இவருடைய மனைவி பெயரை சாஜிதா என மாற்றிக் கொண்டுள்ளனர் . இவர்களுக்கு  2 பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. 

    இந்த நிலையில் இவருடைய மனைவி சாஜிதா கடந்த 21ந் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுள்ளார். பின்பு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

     இவரது  உடல்நிலை கடந்த 25 ந் தேதி மோசமானது. இதையடுத்து அவரது குடும்பத்தினர்   விசாரித்த போது எலி பேஸ்ட் தின்றுவிட்டதாக  கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த  அவர்கள் காவேரி பட்டனம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்  மேல்சிகிச்சைக்காக நேற்று சேலம் கொண்டு சென்றனர்  

    இந்நிலையில் நேற்று இரவு சாஜிதா பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மீனாட்சி மகாலில் பா.ம.க ஒருங்கி ணைந்த மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க இளை ஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்பி., பங்கேற்று பேசினார். 
    பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி யளித்தார். அப் போது அவர் கூறிய தாவது:
    தற்போது சட்டமன்ற தேர்தலின் போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட் சிக்கு வந்தால் பழைய ஓய் வூதிய திட்டம் 2004 க்கு பிறகு வந்தவர் களுக்கு அமல் படுத் தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை செயல் படுத்தப் படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை ஆகும். எனவே அதை செயல் படுத்த வேண்டும். இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். 

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம், 2 ஆயிரம் மதுக் கடைகள் என படிப்படியாக குறைத்து, 4 ஆண்டுகளில் முழுமையாக மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்.   
    மேலும், கிருஷ்ணகிரி மா வட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணே கொள் புதூர் திட்டம், படேத லாவ் கால்வாய் திட்டம் செயல் படுத்திட வேண்டும். கிருஷ்ணகிரி , புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பணி கள் கடந்த 10 ஆண்டு களாக ஆமை வேகத்தில் நடக்கிறது. சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை உடன டியாக அமைத்திட வேண்டும். 

    மாவட்ட தலை நகரமான கிருஷ்ணகிரியில் ரெயில் சேவை இல்லை. அதை செயல்படுத்திட வேண் டும். ஆளுநரும், தமிழக அரசு இணைந்து ஒன்றாக செயல் பட்டால் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது உகந்ததாக இருக்கும். தமிழக அரசு என்பது மக்களின் உணர் வாகும். ஜனநாயக முறைப் படி வாக்களித்து தேர்வு செய்து ஆட்சிக்கு வந்தவர்கள். ஆளுநர் அந்த அரசிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அதே போல அரசும் ஆளுந ருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அப்படி செயல் பட்டால் எந்த பிரச் சினையும் இல்லை. இல்லா விடடால் தமிழகத் திற்கு பாதகமாகவே இருக்கும். 

    ஆளுனர் பல்லைக் கழகங்களின் வேந்தர் ஆவார். அவர் துணை வேந்தர்களை அழைத்து பேசி உள்ளார். தற்போது தமிழக சட்ட சபையில் துணை வேந்தர் களை தமிழக அரசே தேர்ந் தெடுக்க தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த முறை ஏராளமான மாநிலங் களில் நடை முறையில் உள் ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.,  உள்ளிட்டோர் உடனி ருந்தனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். 

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 

    இந்த விழாவில் கடந்த 5 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் தர்மராஜா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தர்ம கோவில் திருவிழாவை முன்னிட்டு அர்ஜூனன் தபசு நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் அர்ஜுனன் வேஷமிட்டு நாடக குழுவினர் மரத்தின் மீது ஏறி தவமிருந்து கருடன் வந்து மூன்று முறை வட்டமிட்ட பிறகு கீழ இறங்கி வந்தனர். மேலும் இந்த விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விரதம் இருந்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அர்ஜுனன் தவசு நாடகத்தில் விரதமிருந்த அர்ஜினன் அவர்களுக்கு குழந்தை வரமளித்தார். இந்த விழாவில் தாசரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ்10 பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 69). ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இவரது மகன் கார்த்திக் (30), என்பவருக்கும், ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகள் சந்தியா (25) என்பவருக்கும், கடந்த 2018 ல் திருமணம் நடந்தது. 

    அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால், தம்பதிகள் திருமணமான 2 மாதங்களில் பிரிந்தனர். தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம், நாகராஜன் வீட்டுக்கு சென்ற அவரது மருமகன் சந்தியா, நகைகளை திருப்பி தருமாறு கேட்டார்.

     தன்னிடம் எந்த நகையும் இல்லை என நாகராஜன் கூறினார். இதனால் அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜனை கையால் தாக்கினர்.

    இது தொடர்பாக, அவரது புகாரின் பேரில் பிரபாகரன் (30), அவரது தந்தை ஜெயபிரகாஷ் (53), தாய் பிருந்தா (47), தங்கைகள் சந்தியா (25), அர்ச்சனா (23), ஆகிய 5 பேர் மீது ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சிக்கம்மா& தொட்டம்மா கோவில் தேவர்கள் வழியனுப்பும் விழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி கோவில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. 4 நாட்களாக நடைபெற்ற இத்திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 4 தேவர்கள் கொண்டுவரப்பட்டனர். 

    மூன்று நாள் நிகழ்ச்சியில் அனைத்து தேவர்கள் கூட்டம் நடைபெற்றது பின்னர் கங்கை பூஜை, ஏழுமடி பூஜை, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் தேவர்கள் ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க அது விமர்சியாக நடைபெற்றது பின்பு பென்னு சிடி, பல்லக்கு ஊர்வலம், கரகம், பாட்டுக் கச்சேரி, ராஜ விக்கிரமா என்ற சனி பிரபா நாடகமும், நள தமயந்தி நாடகம், வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

    கடைசி நாளான நேற்று எருதுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து தேவர்கள் வழியனுப்பும் விழா நடந்தது இவ்விழாவை காண தேன்கனிக்கோட்டை மற்றும்  சுற்றுப்புற கிராம மக்கள் ,பெங்களூர், ஆனேக்கல், மைசூர், கனகபுரா, மண்டியா, கொள்ளேகால் ஆகிய பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    இத்திருவிழா குறித்து பிக்கனப்பள்ளி கிராம  ஊர் பெரியவர்கள் கூறுகையில் குரும்பர் இனத்தவர்களுக்கு குலதெய்வமாக சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி கிராம தேவதைகளாக உள்ளனர். முன்னொரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சிக்கம்மா தொட்டம்மா இங்கு வந்து குடி புகுந்துள்ளனர்.

     இவர்கள் இருவருக்கும் 63 அண்ணன்கள்&தங்கைகள் வீட்டிற்கு வந்து செல்லும் அண்ணன்கள் தங்கைகளை விட்டுப் பிரியும் காட்சிதான் தேவர்கள் வழியனுப்பும்  நிகழ்ச்சி தேவர்கள் செல்லும்போது பசுமாடுகள் தங்கைகளை விட்டு செல்ல வேண்டாம் என தடுப்பார்கள். இந்த நிகழ்ச்சி நேற்று கோவில் அருகே தத்ரூபமாக நடந்தது பசுமாடுகள் கண்ணீர் விட்டு அமுதன. 

    இதனைப் பார்த்த கூடியிருந்த பக்தர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது. இந்த காட்சியை காண்பதற்கு தான் பல்லாயிரம் பக்தர்கள் ஆண்களும், பெண்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது ஒரு அண்ணன் தங்கை பாச உணர்வு காட்சி இன்று தேவர்கள் சாலி வாரம் கிராமத்தில் தங்கி விருந்து உண்டு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டு பின்னர் கர்நாடகா சென்று அடைவார்கள் என தெரிவித்தனர்.

    விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய் திருந்தனர்.
    கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளை களை அதன் உரிமையாளர்களை வாகனத்தில் அழைத்து வந்தனர்.

    கோ -பூஜை செய்யப்பட்டு, வாடி வாசல் வழியாக ஒவ் வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நிமிடங்களில் கடந்தகாளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில் எருது விடும் விழாவில் கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள மடவாளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 45) என்பவரை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். 15 பேர் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டனர்.
    கிருஷ்ணகிரி அருகே பள்ளி வளாகத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 23 ந் தேதி இரவு 3 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். 
    இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளியின் நிர்வாகி புவியரசன் மது குடித்து கொண்டிருந்த வாலிபர் களை தட்டிக் கேட்டார். 

    அப்போது அவர்கள் ஆபாசமாக திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்தில் புவி யரசன் புகார் செய்தார்.

     அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மது குடித்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது21) கோவிந்தராஜ் (20) விஜயகுமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் துணிக்கடையில் புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம்  அடுத்து மில் மேட்டில்  துணி கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது மனைவி சத்யா ( வயது 35) 
    கடந்த 21 ந் தேதி அன்று மாலை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட் டார்.

    இந்நிலையில் மறுநாள் அதி காலை 4 மணி அளவில் இவரது கடையின் ஷட்டர் உடைக் கப்பட்டு இருந்ததாக அருகில் இருந்தவர் தகவல் தெரி வித்தனர். உடனடியாக கடையில் சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போய் இருந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம்  போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் காவேரிப் பட்டணம் சப் இன்ஸ்பெக்டர் அறிவழகன், சிறப்பு சப்  இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர்   போத்தாபுரம் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது சந்தேகத்துக் கிடமான முறை யில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சசீஷ் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

     இதில் துணி கடையின் ஷட்டரை தான் உடைத்து பணம் திருடியதை  ஒப்புக் கொண்டான். இதையடுத்து சதீசை போலீசார் கைது செய்தனர்.  இவன் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தெரிகிறது.

    மேலும் குருபரபள்ளி  போலீஸ் நிலையத்தில் சதீஷ் மீது கேமரா திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது திருப்பத்தூர் பகுதியில் குண்டாஸ் வழக்கும் நிலுவை யில் உள்ளதாக தெரிகிறது.
    கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி போலீஸ் ஸ்டேஷன் காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கும்ளாபுரம் சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது குட்காவை கடத்தி செல்வது தெரிந் தது. 

    இதனால் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் தென்னங் குடிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் சேலத்திற்கு  குட்காவை கடத்தி செல்வது தெரிந்தது. 

    இதையடுத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.5 டன் குட்கா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×