என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஊர்வலமாக பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்ற காட்சி.
    X
    ஊத்தங்கரை அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஊர்வலமாக பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்ற காட்சி.

    மாரியம்மன் கோவில் திருவிழா

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையனூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது.
    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொண்டாடப்பட்டது.

    தொடர்ந்து 3 நாள் நடைபெறும் திருவிழாவில் 2&ம் நாளில் மாரியம்மன் கோவிலுக்கு மேளதாளத்துடன் கிராமத்து பெண்கள் கூல் மற்றும் பொங்கல் கூடையை எடுத்து சென்றனர். 

    அப்போது வேடியப்பன் மற்றும் மாரி யம்மன் சிலை கரகம் வீடு வீடாக வலம் வந்தது. அப் போது பக்தர்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×