என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா நடந்தது.
    X
    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா நடந்தது.

    சிக்கம்மா தொட்டம்மா கோவில் தேவர்கள் வழியனுப்பும் விழா

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சிக்கம்மா& தொட்டம்மா கோவில் தேவர்கள் வழியனுப்பும் விழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி கோவில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. 4 நாட்களாக நடைபெற்ற இத்திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 4 தேவர்கள் கொண்டுவரப்பட்டனர். 

    மூன்று நாள் நிகழ்ச்சியில் அனைத்து தேவர்கள் கூட்டம் நடைபெற்றது பின்னர் கங்கை பூஜை, ஏழுமடி பூஜை, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் தேவர்கள் ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க அது விமர்சியாக நடைபெற்றது பின்பு பென்னு சிடி, பல்லக்கு ஊர்வலம், கரகம், பாட்டுக் கச்சேரி, ராஜ விக்கிரமா என்ற சனி பிரபா நாடகமும், நள தமயந்தி நாடகம், வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

    கடைசி நாளான நேற்று எருதுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து தேவர்கள் வழியனுப்பும் விழா நடந்தது இவ்விழாவை காண தேன்கனிக்கோட்டை மற்றும்  சுற்றுப்புற கிராம மக்கள் ,பெங்களூர், ஆனேக்கல், மைசூர், கனகபுரா, மண்டியா, கொள்ளேகால் ஆகிய பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    இத்திருவிழா குறித்து பிக்கனப்பள்ளி கிராம  ஊர் பெரியவர்கள் கூறுகையில் குரும்பர் இனத்தவர்களுக்கு குலதெய்வமாக சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி கிராம தேவதைகளாக உள்ளனர். முன்னொரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சிக்கம்மா தொட்டம்மா இங்கு வந்து குடி புகுந்துள்ளனர்.

     இவர்கள் இருவருக்கும் 63 அண்ணன்கள்&தங்கைகள் வீட்டிற்கு வந்து செல்லும் அண்ணன்கள் தங்கைகளை விட்டுப் பிரியும் காட்சிதான் தேவர்கள் வழியனுப்பும்  நிகழ்ச்சி தேவர்கள் செல்லும்போது பசுமாடுகள் தங்கைகளை விட்டு செல்ல வேண்டாம் என தடுப்பார்கள். இந்த நிகழ்ச்சி நேற்று கோவில் அருகே தத்ரூபமாக நடந்தது பசுமாடுகள் கண்ணீர் விட்டு அமுதன. 

    இதனைப் பார்த்த கூடியிருந்த பக்தர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது. இந்த காட்சியை காண்பதற்கு தான் பல்லாயிரம் பக்தர்கள் ஆண்களும், பெண்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது ஒரு அண்ணன் தங்கை பாச உணர்வு காட்சி இன்று தேவர்கள் சாலி வாரம் கிராமத்தில் தங்கி விருந்து உண்டு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டு பின்னர் கர்நாடகா சென்று அடைவார்கள் என தெரிவித்தனர்.

    விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய் திருந்தனர்.
    Next Story
    ×