என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் சேதமானது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மேல்சங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவர் போச்சம்பள்ளியில் தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நள்ளிரவு ஆயில் கேன்கள், தீப்பற்றி வெடிக்கத் தொடங்கியது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டயர்கள் ஆயில் கேன்கள் மற்றும் உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் இன்று நடந்த சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள, ஆடுகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்திருந்தனர்.
குந்தாரப்பள்ளியில் இன்று நடந்த சந்தையில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை வந்திருந்தன. வருகிற 3-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள விற்பனையானதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்க னூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (வயது 70) என்பவர் கஞ்சா விற்பதாக சிங்காரப்பேட்டை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்ததில் குமரேசன் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து குமரேசனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்து நாயக்கன்பட்டி அருகே உள்ள பொம்மதா சம்பட்டியைச் சேர்ந்த 2-ம் வகுப்பில் படிக்கும் 7 வயது சிறுமி அவருடைய பாட்டி உண்ணாமலை என்பவர் வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவராமன் (வயது 35 ) வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிறுமியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவர் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள கெம்பகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் மொத்தம் 102 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரியர்கள் உள்ளனர்.
நேற்று பள்ளியில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த பணி மாறுதல் கவுன்சிலிங்கிற்கு சென்றிருந்தனர். இதனால் தலைமையாசிரியர் லாரன்ஸ் மட்டும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது பள்ளியில் 7ம் வகுப்பு மாணவியை அழைத்து புத்தகம் தருவதாக கூறி தனி அறைக்கு வர சொல்லி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சம் அடைந்த மாணவி உடனே வீட்டிற்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என கூறி கதறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமையாசிரியர் லாரன்சை அடித்து உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். உடனே அவர்களிடம் இருந்து தப்பிய லாரன்ஸ் தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரது காரை வழிமறித்து அவரது கார் கண்ணாடியை உடைத்து கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தாக்குதலுக்கு ஆளான தலைமை ஆசிரியர் லாரன்ஸ், அவர்களிடம் இருந்து தப்பித்து தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் லாரன்ஸ் வீட்டிற்குச் சென்று வீட்டில் மறைந்து இருந்த லாரன்சை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும் பெற்றோரிடம் கிராம பொது மக்களிடமும் விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தால் கெம்பகரை அரசு நடுநிலை பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் லாரன்சை சஸ்பெண்ட் செய்து தேன்கனிகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பண்டி குறி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது 5 வயது மகள் கீர்த்தி, கடந்த 22-ந்தேதி வீட்டின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டி ருந்தாள்.
அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்,
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. இவரது மகன் குமார் (வயது 20). இவரது செல்போனுக்கு, கடந்த மாதம் 10- ந்தேதி அன்று எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது.
அந்த எஸ்.எம்.எஸ்சில் நீங்கள் தினமும் வீட்டிலிருந்தே அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியிருந்தது. இதுபற்றி குமார் அந்த எஸ்.எம்.எஸ் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசினார். அதில் அவர் நீங்கள் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி அவருக்கு வந்து எஸ்.எம்.எஸ் உள்ள லிங்கை ஓபன் செய்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து 14 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. அந்த பணத்திற்கு போதிய வட்டியும் பணமும் வரவில்லை. இதனால் குமார் ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பீர் பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோமநாதபுரம் என்ற பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே தம்பதி சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெரிகே பள்ளியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 41). இவரது மனைவி நர்கீஸ் (36). இந்த தம்பதிக்கு முகமது உசேன் (12) பாஷா (8) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சனை தொடர்பாக அவரது மைத்துனர் முனவர்பாஷா மற்றும் சையத் பாட்சா ஆகிய இருவரும் தன்னை அடித்து விட்டதாக சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜாகீர் உசேன் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் சாமல்பட்டி போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக தங்கள் ஜமாத்தில் பேசிக் கொள்வதாக கூறியதால் சாமல்பட்டி போலீசார் வழக்கை முடித்தனர்.
இந்த நிலையில் ஜாகிர் உசேன் மற்றும் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கூறி கெரிகேபள்ளி மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த சாமல்பட்டி போலீசார் ஜாகீர் உசேனிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதனை தொடர்ந்து ஜாகிர் உசேன் மறியலை கை விட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்ரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 19).
இவரது தம்பி தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் தனது தம்பிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த வேதியியல் ஆசிரியர் சீனிவாசன் (39) 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்துள்ளார்.
இதை அறிந்த அருணாச்சலம் தன் நண்பருமான சக்திவேல் என்பவருடன் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சீனிவாசனை பணி செய்ய விடாமல் தடுத்து அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வரு கின்றனர்.
கிருஷ்ணகிரியில்ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆ ர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ ங்கதிர்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொரு ளாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஊராட்சியில் பணியாற்றிவரும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கிருஷ்ணகிரியில்காவல்துறை வாகனங்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் போனது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் காவல் துறையின் கழிவு வாகனங்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட, 16 இருசக்கர வாகனங்கள் மற்றும் 11 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் நேற்று ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.
முன் பணமாக ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூ.ஆயிரமும், ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி 55 பேர் பதிவு செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி.க்கள், விவே கானந்தன், சங்கு ஆகியோர் தலைமையில் நடந்த ஏலத்தில் ஒ வ்வொரு வாகனமாக நிறுத்தப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையை கூறி ஏலம் விடப்பட்டது.
இதில், 4 நான்கு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாக னங்கள் மொத்தம் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஆயுதப்படை டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் சக்தி, ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ஏலத்தை முன்னின்று நடத்தினர்.