என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
காவேரிப்பட்டணம் அருகே வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்,
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. இவரது மகன் குமார் (வயது 20). இவரது செல்போனுக்கு, கடந்த மாதம் 10- ந்தேதி அன்று எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது.
அந்த எஸ்.எம்.எஸ்சில் நீங்கள் தினமும் வீட்டிலிருந்தே அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியிருந்தது. இதுபற்றி குமார் அந்த எஸ்.எம்.எஸ் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசினார். அதில் அவர் நீங்கள் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி அவருக்கு வந்து எஸ்.எம்.எஸ் உள்ள லிங்கை ஓபன் செய்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து 14 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. அந்த பணத்திற்கு போதிய வட்டியும் பணமும் வரவில்லை. இதனால் குமார் ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார்.
Next Story






