என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காவேரிப்பட்டிணம் அருகே கணக்கு வழக்குகளை கேட்ட போது பஞ்சாயத்து தலைவியை ஊராட்சி செயலாளர் தாக்கியுள்ளார்.
    காவேரிப்பட்டிணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  தாமோதரஹள்ளி பஞ்சாயத்திற்கு  தலைவியாக வெண்ணிலா முருகேசன் இருந்து வருகிறார். இந்த பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக சின்னசாமி பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சின்னசாமி அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாயத்து தலைவியிடம் பேசும்பொழுது ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    அலுவலக பதிவேடுகள் சரிவர பராமரிப்பதில்லை என ஊராட்சி செயலாளர் மீது ஊராட்சி தலைவி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து நாளை நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு நேற்று பதிவேடுகள் சரிபார்க்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவின் கணவர் முருகேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இந்த தகராறு முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஆனது. இதனை தடுக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவையும், ஊராட்சி செயலாளர் சின்னசாமி தாக்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதனால் காயம் அடைந்த வெண்ணிலா காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவிடம் கேட்டபோது, ஊராட்சியின் செயலாளர் சின்னசாமி பஞ்சாயத்துக்கான கணக்கு வழக்குகள் எதுவும் சரியாக வழங்குவதில்லை. மேலும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான பணி ஆணைகளை வழங்குவதில்லை.

    தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தியும், சரியாக அலுவலகத்திற்கு வராமலும் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரு பெண் என்று கூட பாராமல் அனைவரின் முன்னி லையிலும் தன்னை தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் பேசி வந்தார். இதனை தட்டிக்கேட்ட போது தனது கணவரையும் ஒருமையில் பேசினார் என தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து பாரூர்  போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில்ப ட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். 

    மாவட்ட செயலாளர் விஜயன்,மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜா ஆகியோர்முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஹரி சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, பணியிடத்தை நிரப்புதல் மற்றும் பொது மாறுதல்கலந்தாய்வு மூலம் கூடுதல் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்குகடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கடந்தஇரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்புச் சட்டம்ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தசாமி, வெங்கடேசலு,ராஜ்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், சிவக்குமார், சுபாஷ்,மாவட்ட மகளிரணி செயலாளர் கலைவாணி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் தமிழரசி,மாநில பொதுக்குழு உறுப்பினர் மயிலழகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    போச்சம்பள்ளி அருகே வேலைக்கு சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரசாந்த் (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மோனிகா என்கிற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து மோனிகா போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பிரசாந்தை தேடி வருகின்றனர். 
    போச்சம்பள்ளி அருகே மினி பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மத்தூர், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி.  இவரது மகன் மணிகண்டன் (வயது31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று இவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது போச்சம்பள்ளி ஐந்து ஆழமரம் அருகே வரும் போது எதிரே வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர் அருகே வளையல் வியாபாரி வீட்டில் கொள்ளை போனது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது60). இவர் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா.
    இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவி இருவரும் வளையல் வியாபாரத்திற்கு சென்றனர். 

    பின்னர் மாலையில் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு  பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். 

    அங்கு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.  மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம் அருகே உப்பு என நினைத்து ஆய்வகத்தில் இருந்த மெக்னீசியம்பா ஸ்பேட்டை தின்ற, 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ளது மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி. இதில், 941 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படித்து வருகிறார்கள். 

    அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 180 பேருக்கு ஒரே நேரத்தில் ஆய்வக தேர்வு நடந்தது. அதற்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும்மெ க்னீசியம் பாஸ்பேட்டை காகிதத்தில் மடித்து ஜன்னல் ஓரம் வைத்துள்ளனர். 

    நேற்று காலை, 11 மணியளவில் அந்த வழியாக சென்ற அந்த பள்ளியின் 7 ம்வ குப்பு மாணவர்கள் ஜன்னல் ஓரத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை மிளகாய்தூள் உப்பு கலவை என நினைத்து எடுத்து சென்று, தாங்கள் வைத்திருந்த மாங்காயுடன் சேர்த்து சாப்பிட்டனர்.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்துள்ளனர். சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து வாந்தி எடுத்து மயங்கிய, ஏழாம் வகுப்பு மாணவர்கள், 10 பேர் மற்றும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் ஆகிய, 11 பேரை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில்அ னுப்பி வைத்தனர். 

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்காமல் ஒரே படுக்கையில் 2 முதல் 5 மாணவர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம்அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்களில் ரூ.1,000 கோடி அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர்ஆ .ராதாகிருஷ்ணன் கூறினார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திருத்தொண்டர்கள் சபையின்நி றுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் வந்தார். அவர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக கலெக்டர் ஜெயசந்திரபானுவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் கோவில்நி லங்களில் அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், அங்கு கனிம வளங்கள் கொள்ளை போவது தொடர்பாக நான் ஆய்வு நடத்த வந்துள்ளேன். தருமபுரி மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக கோவில்களில் மறைக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. 

    இமயம் முதல் குமரி வரையில் சட்டம் அனைவருக்கும் சமம். 
    ஆனால் இந்த பகுதியில் அறநிலையத்துறை சரியாக இயங்கவில்லை. அறநிலையத்துறையின் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆவணங்கள்இ ங்கு இல்லை. 

    எந்த கோவில்களுக்கு எவ்வளவு சொத்து மதிப்பு என்று தெரியவில்லை. இங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம்தொ டங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. அங்கு எந்த ஆவணங்களும் முறையாக பேணப்படவில்லை.

    தமிழகத்தில் 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். கோவில்களில் தண்ணீர் தொட்டி, கால்நடைகளுக்கான இடம், மற்றும் கோவில்களுக்கான சொத்து என்று கணக்கிட்டால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கோவில் நிலங்களில் உள்ள ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

    இந்த மாவட்டத்தில்பு கழ் பெற்ற பேட்டராய சாமி கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிலைகள்தி ருட்டு போனது. அதன் நிலை என்ன என்று தெரியவில்லை. நகை, ஆவணங்கள்எதுவும் மதிப்பீடு செய்யப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கு காரணமாக அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    தொடர்ந்து கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஆஞ்சநேயர் சாமி கோவிலை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், கோவிலுக்கு சொந்தமான ஆவணங்களை பார்வையிட்டார்.
    காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
     
    அப்போது சப்பானிபட்டி-கும்பரா அள்ளி  ரோட்டில் கஞ்சா விற்ற 3 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். உடனே போலீசார் விரட்டி பிடித்தனர். அதில் 2 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவன் மட்டும் பிடிப்பட்டான்.

    விசாரணை நடத்தியதில் ருத்ரன் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    எலக்ட்ரிக் பைக்குகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் எலக்ட்ரிக் பைக் வைத்து இருப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் பயனித்து வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் சீட் கீழ் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், பைக்கை நிறுத்திவிட்டு சீட்டை திறந்து பார்த்தார். அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்தவாறு கரும்புகை மளமளவென்று பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் நடக்கும் சீர்கேடுகளையும், அவல நிலைகளையும், ஒழுக்கமின்மை அறிந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் தாலி கட்டியுள்ளார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து விசாரித்தனர்.

    இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து மாணவ, மாணவியரை எச்சரித்து அனுப்பி உள்ளார். 9ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் மீது இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் நடக்கும் சீர்கேடுகளையும், அவல நிலைகளையும், ஒழுக்கமின்மை அறிந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் நடக்கும் சீர்கேடுகளையும், ஒழுக்கமின்மையும் சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தப் பள்ளிகளில் நடக்கும் ஒழுக்கமின்மையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
    கிருஷ்ணகிரியில் 334 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீசார் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 334 கிலோ இருப்பது தெரியவந்தது.  
    அதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 

    பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம், அலசம் பகுதியை சேர்ந்த ராதாராம் (வயது30) என்பது தெரியவந்தது.

     அவர் காஞ்சிபுரம் உத்தனமேலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த புகையிலை பொருட்கள் காரில் பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரத்திற்கு கடத்தி சென்ற போது சிக்கி கொண்டது தெரியவந்தது. 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்கள் கடத்திய காரை பறிமுதல் செய்து ராதாராமை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவர் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள கெம்பகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் மொத்தம் 102 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர் தலைமை யாசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரி யர்கள் உள்ளனர்.

    நேற்று பள்ளியில் பணி புரியும் மூன்று ஆசிரி யர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தில் நடந்த பணி மாறுதல் கவுன்சிலிங்கிற்கு சென்றிருந்தனர். இதனால் தலைமை யாசிரியர் லாரன்ஸ் மட்டும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அப்போது பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியை அழைத்து புத்தகம் தருவதாக கூறி தனி அறைக்கு வர சொல்லி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால் அச்சம் அடைந்த மாணவி உடனே விட்டிற்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என கூறி கதறி அழுதுள்ளார்.
    இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று தலைமை யாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

     ஒருகட்டத்தில் ஆத்திர மடைந்த அவர்கள் தலைமை யாசிரியர் லாரன்சை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி யுள்ளனர். உடனே அவர்களிடம் இருந்து தப்பிய லாரன்ஸ் தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார். 

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரது காரை வழி மறித்து அவரது கார் கண்ணாடியை உடைத்து கார் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
    இதில் தாக்குதலுக்கு ஆளான  தலைமை ஆசிரியர் லாரன்ஸ், அவர்களிடம் இருந்து  தப்பித்து தேன்கனி க்கோட்டை உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார் .
    இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்   போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் லாரன்ஸ் வீட்டிற்குச் சென்று வீட்டில் மறைந்து இருந்த லாரன்சை பிடித்துபோக்சோ சட்டத்தில் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனி க்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும்  பெற்றோரிடம் கிராம பொது மக்களிடமும் விசா ரணை நடத்தினார்.

     இந்த சம்பவத்தால் கெமபகரை அரசு நடுநிலை பள்ளியில் பணிபுரியும் தலைமை யாசிரியர் லாரன்சை சஸ்பெண்ட் செய்து தேன்கனிகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
    ×