என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் 334 கிலோ புகையிலை பொருட்கள் காரில் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது

    கிருஷ்ணகிரியில் 334 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீசார் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 334 கிலோ இருப்பது தெரியவந்தது.  
    அதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 

    பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம், அலசம் பகுதியை சேர்ந்த ராதாராம் (வயது30) என்பது தெரியவந்தது.

     அவர் காஞ்சிபுரம் உத்தனமேலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த புகையிலை பொருட்கள் காரில் பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரத்திற்கு கடத்தி சென்ற போது சிக்கி கொண்டது தெரியவந்தது. 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்கள் கடத்திய காரை பறிமுதல் செய்து ராதாராமை கைது செய்தனர்.
    Next Story
    ×