என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியர் லாரன்ஸ்.
    X
    தலைமை ஆசிரியர் லாரன்ஸ்.

    தேன்கனிக்கோட்டை அருகே மாணவியிடம் சில்மிஷம்: தலைமையாசிரியர் போக்சோவில் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவர் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள கெம்பகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் மொத்தம் 102 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர் தலைமை யாசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரி யர்கள் உள்ளனர்.

    நேற்று பள்ளியில் பணி புரியும் மூன்று ஆசிரி யர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தில் நடந்த பணி மாறுதல் கவுன்சிலிங்கிற்கு சென்றிருந்தனர். இதனால் தலைமை யாசிரியர் லாரன்ஸ் மட்டும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அப்போது பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியை அழைத்து புத்தகம் தருவதாக கூறி தனி அறைக்கு வர சொல்லி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால் அச்சம் அடைந்த மாணவி உடனே விட்டிற்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என கூறி கதறி அழுதுள்ளார்.
    இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று தலைமை யாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

     ஒருகட்டத்தில் ஆத்திர மடைந்த அவர்கள் தலைமை யாசிரியர் லாரன்சை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி யுள்ளனர். உடனே அவர்களிடம் இருந்து தப்பிய லாரன்ஸ் தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார். 

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரது காரை வழி மறித்து அவரது கார் கண்ணாடியை உடைத்து கார் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
    இதில் தாக்குதலுக்கு ஆளான  தலைமை ஆசிரியர் லாரன்ஸ், அவர்களிடம் இருந்து  தப்பித்து தேன்கனி க்கோட்டை உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார் .
    இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்   போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் லாரன்ஸ் வீட்டிற்குச் சென்று வீட்டில் மறைந்து இருந்த லாரன்சை பிடித்துபோக்சோ சட்டத்தில் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனி க்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும்  பெற்றோரிடம் கிராம பொது மக்களிடமும் விசா ரணை நடத்தினார்.

     இந்த சம்பவத்தால் கெமபகரை அரசு நடுநிலை பள்ளியில் பணிபுரியும் தலைமை யாசிரியர் லாரன்சை சஸ்பெண்ட் செய்து தேன்கனிகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
    Next Story
    ×