என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கியதில் பசுமாடு இறந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் அடுத்துள்ள சித்த லிங்க கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் உளிரன். இவரது மனைவி நஞ்சம்மா என்பவருக்கு தமிழக அரசால் பசுமாடு ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. 

    அந்த மாட்டை  கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மதியம் ஒரு செடியில்  பசு மாட்டை கட்டி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

    மீண்டும் பசுமாடு பார்ப்பதற்காக சென்றபோது யானையின் பிளறல் சத்தம் கேட்டு பயந்து நஞ்சம்மா வீட்டிற்கு வந்து கணவர் மட்டும் உறவினர்களை அழைத்து கொண்டு அப்பகுதிக்கு சென்றுள்ளார் . அப்போது யானை தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில் ஒடையில் கிடந்தது.  இதனை பார்த்த நஞ்சம்மா கதறி அழுதார்.

    இதுபற்றி தகவலறிந்த தேன்கனிகோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திறகு  சென்று  பலியான மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  

     மேலும் ஒற்றை யானை கிராமத்திற்கு வராதவாறு வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஒற்றை யானை தாக்கி பசுமாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சாகசம் செய்யும் இளைஞர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர், 

    சமீப காலங்களாக, சாலைகளில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞா்கள் சிலர், ஆர்வக்கோளாறினால் சாகசத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

    அந்த வரிசையில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சூளகிரி நோக்கி ஸ்கூட்டரில் சென்ற 2 இளைஞர்களில், வண்டியை ஓட்டிச்சென்றவர் பவர்கிரீட் பகுதி அருகே சென்றபோது, திடீரென சிறிது தொலைவு வரை சாகசத்தில் ஈடுபட்டவாறு செல்லும் காட்சி, வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பதைபதைப்பை ஏற்படுத்தின. 

    தேசிய நெடுஞ்சாலையில் இதுபோல் வீலிங் செய்து செல்வது, அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பதை ஏனோ அந்த இளைஞர்கள் மறந்துவிட்டனர்? இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு மட்டுமின்றி எதிரே வரும் வாகனங்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

    காவல்துறையினரும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளியை அடுத்து பேளாலம் செல்லும் சாலையில் பெங்களூரை சேர்ந்த அலியுல்லா கான் (வயது 50 )என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது.

    இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை, பண்ணைக்குள் புகுந்து 5 வயது குதிரையை கடித்து குதறி கொன்று அதன் உடலை சாப்பிட்டு சென்றுள்ளது.

    இதுபற்றி தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் குதிரையை கொன்றது சிறுத்தை தான் கொன்றது என உறுதியானது. இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க பண்ணை தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர்.

    அப்போது மீண்டும் அந்த சிறுத்தை பண்ணையில் புகுந்து இறந்து கிடந்த குதிரையின் உடலில் சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதனால் குதிரை பண்ணை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் தளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான பேளாளம், நெல் மார், ஆச்சு பாலம், சூட சந்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்து இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் மாலை நேரத்திலே வீடு திரும்பி விடுகின்றனர்.

    இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும், இருசக்கர வாகனங்களில் வருவோர் மாலையிலேயே வீட்டுக்கு வந்து விடுமாறும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் சுற்றி வனத்துறையினர் குழு அமைத்து முகாம் அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

    சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாராக மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அருகே மோரனஅள்ளி, கொடுகூர், சோக்காடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 டன்னுக்கு அதிகமான மாங்காய்கள் உதிர்ந்தது.

    தோட்டத்தில் உதிர்ந்த மாங்காய்கள் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து, மண்டிகளுக்கு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுகூர் பகுதி மா விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆறு மற்றும் கிணறு பாசனம் மூலம் மா விளைச்சல் ஒரளவிற்கு இருந்தது.

    இந்நிலையில், ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன.

    நாங்கள் அறுவடை செய்து மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் பெங்களூரா ரக மாங்காய்கள் டன் ரூ.14 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.

    மழைக்கு உதிர்ந்த மாங்காய்கள் டன் ரூ.5 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பராமரிப்பு, மருந்து, கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் கூட கிடைப்பதில்லை. வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டோம்.

    எனவே, தமிழக அரசு நெல், கரும்புக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது போல், கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாகலூர் பெல்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது40). இவரது ெசல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 

    அதில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய மஞ்சுளா உடனே அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

    அந்த நபர் முதலில் நீங்கள் 60 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் பிறகு உங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புகிறேன் என்றார். இதனை நம்பிய மஞ்சுளா உடனே அந்த வங்கி கணக்கிற்கு பணம் 60 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் மஞ்சுளாவுக்கு பணம் எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். 

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாட்டுத்துப்பாக்கி குறித்து தகவல் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் பாராட்டினர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தின் அருகே நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன்  போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். 

     அடையாளம் தெரியாத நபர்கள் புளியம்பட்டி சமூக சமுதாய கூடம் அருகே நாட்டு துப்பாக்கியை வீசிச்சென்றுள்ளனர். துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாட்டுத்துப்பாக்கி குறித்து தகவல் அளித்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு   போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள அரசம்பட்டி பகுதியில் பொதுமக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இதில் நேற்று நடைபெற்ற மே தின கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்த்திடம் பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

    முகாமில் 2 வாரங்களாக குடிநீர் சரிவரை வராததால் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டபோது பொதுமக்ளிடம் சரி வரை பதில் அளிக்காத ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்கத்தை கண்டித்தும், கிராமசபை கூட்டத்தை புறகணித்தும் பொதுக்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வர ஏற்பாடு செய்து கொடுக்க உறுதியளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி மனைவி பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் செல்லும் சாலையில் உள்ள மேல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அடுத்த கிராமமான மணியம்பாடியில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார் .

    இந்நிலையில் இன்று காலை ஓட்டல் திறப்பதற்காக சிவகுமார் மற்றும் மனைவி சித்ரா இருவரும்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது மணியம்பாடி கிராமத்தின் அருகே செல்லும்பொழுது டவுன் பஸ் தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
     அப்போது வளைவில் திரும்பும் பொழுது பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்தனர் . இதில் சித்ராவின் தலையின் மீது பஸ்சின் பின் சக்கரம்ஏறியது இதில் சித்ராவின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவக்குமார் படுகாயமடைந்தார்.

    இந்த விபத்து பற்றி தகவலறிந்த தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில்  படுகாயம டைந்த சிவகுமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கணவன் கண்முன்னே தலையின் மீது பஸ் சக்கரம் ஏறி மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பனப்பபள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சியர் கோவில் பகுதியில் சகாதேவன் என்பவர் வீட்டில் இரவு வழக்கம்போல குடும்பத்தினர் இருந்துள்ள னர். 

    அப்போது வீட்டுக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு வந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறிஅடத்து ஓட்டம் பிடித்தனர். 

    இதையடுத்து அவரை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது 10 அடி நீள மலைப்பாம்பு வீட்டுக்கு வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து நெடுநேரம் போராடிய அப்பகுதி பொதுமக்கள் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து பையில் போட்டு கொங்கனப்பள்ளி காப்புகாட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். 

    வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் எருதுவிடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் அடுத்துள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.

     இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகளை அணியணியாக அவிழ்ந்து விடப்பட்டன. சீறி ப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுப்பொருட்களை மற்றும் அலங்கார தட்டிகளையும் பறித்துச் சென்றனர். அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு மாடுகளை  பிடித்து அடக்கினர்.

    விழாவை காண தேன்கனிக்கோட்டை , கெலமங்கலம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளில் கண்டு ஆரவாரம் செய்து ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    தளி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் குதிரை சாவு
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தளி பகுதியை சேர்ந்தவர் அல்லி உல்லாகான். இவர் பண்ணையில் 20 குதிரைகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்றுகாலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அந்த சிறுத்தை அல்லி உல்லாகான் வளர்த்து வந்த குதிரையை கடித்து குதறியது. இதனால் அந்த குதிரை அலறியது. 

    உடனே அருகில் இருந்த குதிரையின் உரிமையாளர் வந்து பார்த்த போது குதிரையை சிறுத்தை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை கடித்ததில் குதிரை சிறிது நேரத்தில் இறந்தது.

    இது குறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அலுவலர் சுகுமார், வனகாப்பாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர்.  

    அப்போது சிறுத்தை கடித்து பலியான பெண் குதிரையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 
    தளி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தளி பகுதியை சேர்ந்தவர் அல்லி உல்லாகான். இவர் பண்ணையில் 20 குதிரைகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அந்த சிறுத்தை அல்லி உல்லாகான் வளர்த்து வந்த குதிரையை கடித்து குதறியது. இதனால் அந்த குதிரை அலறியது.

    உடனே அருகில் இருந்த குதிரையின் உரிமையாளர் வந்து பார்த்தபோது குதிரையை சிறுத்தை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை கடித்ததில் குதிரை சிறிது நேரத்தில் இறந்தது.

    இதுகுறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அலுவலர் சுகுமார், வனகாப்பாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தை கடித்து பலியான பெண் குதிரையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.




    ×