என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதனுக்கு  இன்ஸ்பெக்டர் பிரபாவதி பாராட்டு தெரிவித்த போது எடுத்த படம்.
    X
    ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதனுக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி பாராட்டு தெரிவித்த போது எடுத்த படம்.

    நாட்டுத்துப்பாக்கி குறித்து தகவல்: ஊராட்சி மன்ற தலைவருக்கு போலீசார் பாராட்டு

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாட்டுத்துப்பாக்கி குறித்து தகவல் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் பாராட்டினர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தின் அருகே நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன்  போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். 

     அடையாளம் தெரியாத நபர்கள் புளியம்பட்டி சமூக சமுதாய கூடம் அருகே நாட்டு துப்பாக்கியை வீசிச்சென்றுள்ளனர். துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாட்டுத்துப்பாக்கி குறித்து தகவல் அளித்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு   போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
    Next Story
    ×