என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்து நாயக்கன்பட்டி அருகே  உள்ள பொம்மதா சம்பட்டியைச் சேர்ந்த 2-ம் வகுப்பில் படிக்கும் 7 வயது சிறுமி அவருடைய பாட்டி உண்ணாமலை என்பவர் வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவராமன் (வயது 35 ) வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். 

    இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிறுமியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். 

    இது குறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமனை கைது செய்தனர்.
    Next Story
    ×