என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குந்தாரப்பள்ளியில் இன்று நடந்த வாரச்சந்தையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    குந்தாரப்பள்ளியில் இன்று நடந்த வாரச்சந்தையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல் இன்று நடந்த சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள, ஆடுகளை வாங்க  திரண்டு வந்திருந்தனர். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக  இன்று   கொண்டு வந்திருந்தனர். 

    குந்தாரப்பள்ளியில் இன்று நடந்த சந்தையில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை வந்திருந்தன.  வருகிற 3-ந் தேதி ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்படுவதால்  இன்று சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள விற்பனையானதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×