என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் எலி பேஸ்ட் தின்று தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளியைப் சார்ந்தவர் பயாஸ் பாஷா (வயது 40). இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணை காதலித்து 13 வருடங் களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் பின்பு இவருடைய மனைவி பெயரை சாஜிதா என மாற்றிக் கொண்டுள்ளனர் . இவர்களுக்கு 2 பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் இவருடைய மனைவி சாஜிதா கடந்த 21ந் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுள்ளார். பின்பு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இவரது உடல்நிலை கடந்த 25 ந் தேதி மோசமானது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விசாரித்த போது எலி பேஸ்ட் தின்றுவிட்டதாக கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவேரி பட்டனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று சேலம் கொண்டு சென்றனர்
இந்நிலையில் நேற்று இரவு சாஜிதா பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story






