என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான ஆடுகளை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கியதில் 4 ஆடுகள் பலியானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி மாது(வயது 37). இவர்கள் 15 ஆடுகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மேய்சலுக்கு சென்றிருந்த ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி சென்றார். அப்போது லேசான மழை பெய்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே, திருமலை நகருக்கு செல்லும் வழியில் சாலையோரம் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும், மின்சார பெட்டி அருகே ஆடுகள் சென் றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், 4 ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தன.
இறந்த 4 ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






