என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் அரசு போக்குவரத்து கண்டக்டர் தூக்குபோட்டு தற்கொலை

    வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் அரசு போக்குவரத்து கண்டக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது32). இவர் சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து துறையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு மதுகுடிக்கம் பழக்கம் உள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பெற்றோர் பாரதிராஜாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்றிரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்காரபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தூக்கில் பிணமாக கிடந்த பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×