என் மலர்
கிருஷ்ணகிரி
- மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள செம்மபுரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சுமித்ரா. இவர்களது மகள் அர்பிதா (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நரசிம்மன் தனது மனைவி, மகளை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனால் சுமித்ராவும்,அர்பிதாவும், சுமித்ராவின் தாய் ராஜம்மாளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜம்மாளும், சுமித்ராவும் வெளியே சென்ற நிலையில் அர்பிதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
வெளியே சென்றிருந்த சுமித்ராவும்,ராஜம்மாளும் திரும்பி வந்து பார்த்தபோது அர்பிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமித்ரா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் தனது மகள் அர்பிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் அர்பிதாவின் உடலை கைப்பற்றி தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமித்ராவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அர்பிதாவை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
9-ம் வகுப்பு மாணவி தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இரு மாநில ெரயில் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது.
- ஓசூரில் உள்ள மக்களின் கனவுத் திட்டம் இது
ஓசூர்,
மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் தமிழகம்-கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கு இடை யேயான போக்குவரத்தை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளலாம்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ெரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக பயணித்து வருகின்றனர்.
இந்த மெட்ரோ ெரயில் சேவைகள் பெங்களூருவில் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ெரயில் சேவையை தமிழ்நாடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதாவது பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்தால் கர்நாடகம், தமிழக மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என வலியுறுத்தப்பட்டது.
கர்நாடகம்-தமிழக எல்லையான ஓசூரில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பெங்களூரில் வேலைக்காக சென்று வருகின்றனர்.
அதேபோல் பெங்களூ ரில் இருந்தும் பலர் ஓசூர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாரும் தொடர்ந்து மத்திய மற்றும் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ெரயில் சேவையை பெங்க ளூரின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இரு மாநில ெரயில் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது.
பெங்களூர் மெட்ரோ ெரயில் திட்டத்தில் கூடுதலாக 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகத்திலும், மீதமுள்ள 8.8 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்தில் அமையும்.
இதுபற்றி கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார் கூறியதாவது:-
ஓசூரில் உள்ள மக்களின் கனவுத் திட்டம் இது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு மாநில மக்களும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயனடைவார்கள்.
இதுதொடர்பாக விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன். மேலும் விரிவான திட்ட அறிக்கையை வழங்ககோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயி வீட்டில் நகைகளை திருடியவர் சிக்கினார்.
- கையும்,களவுமாக மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் என்.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி. (வயது 45). விவசாயியான நேதாஜி தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் பீரோவில் இருந்த ரூ.1.3 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சத்தம் போட்டு அக்கம்பக்க த்தினரை வரவழைத்த நேதாஜி அந்த வாலிபரை கையும்,களவுமாக மடக்கி போலீசில் ஒப்படைத்தார். காவேரிப்பட்டினம் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தபோது சிக்கிய வாலிபர் போச்சம்பள்ளியை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகத்தை தொடர்ந்து, 3 கால பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மகா கும்பாபிஷேகத்தை, திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம், ஸ்ரீ ஆதி சிவலிங்க ஆச்சாரிய சுவாமிகள், 65-வது மடாதிபதியும் ஸ்ரீமத் பரமாச்சாரியார் கோளரினாத ஆதீனம், 39 -வது பீடாதிபதி ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாரியார் சுவாமிகளும், இளைய பட்டம் ஞானசேகரன் ஆகியோர் குழுவினருடன் வேத மந்திரங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் எம்.எல்.ஏ, கே கோபிநாத், ஜெ. ஜெய்சங்கர், ஆறுமுகம், கோயிலின் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.
- கணவர் பிரிந்து சென்றதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள செம்பரசன அல்லி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சுகன்யா (வயது25).
இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் சுகன்யா கோபித்துக்கொண்டு கடந்த 4 மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கணவனை பிரிந்த விரக்தியில் இருந்து வந்து சுகன்யா தனது தாய் வீட்டின் அருகேயுள்ள மரியம்மன்கோவில் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- யமுனை, காவிரி உள்ளிட்ட 32 புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.
- மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சோளகாப்பட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை யொட்டி காலை கணபதி ஹோமத்துடன் மூன்றாம் கால யாக பூஜை தொடங்கியது இதில், கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட 32 புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சோளகா ப்பட்டி ஊர் பொதுமக்கள் கும்பாபிஷேகம் ஏற்பாடு களை செய்திருந்தனர்.
- மினி பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- விபத்தில் ஓட்டுனரின் கால் துண்டானது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மேட்டூர் சூளகரை பகுதியை சேர்ந்த 25 பேர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி, தனியார் பள்ளியின் எதிரே வந்த போது மினிபஸ் வாகனத்தின் முன் டயர் வெடித்தது. இதில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 14 பேர் படுகாயமடைந்து அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
மேலும் வாகனம் ஓட்டி வந்த திருவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதி முருகன் என்பவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நேர்ந்த பரிதாபம்.
- பாலத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் மஹேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பருடன் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்றுள்ளார்.
வாகனத்தை முனியப்பன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த முனி யப்பன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- பெங்களூருவில் இருந்து வரும் கழிவு நீரினால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை பகுதி மாசடைகிறது.
- ஓசூர் கெலவரப்பள்ளி அணையை, அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணை பகுதியில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வரும் கழிவு நீரினால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை பகுதி மாசடைந்து, அணையிலிருந்து வெளியேறும் நீரினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சருடன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.முருகன்,செங்குட்டுவன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசன், நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் குமார், ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன.
- 2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது.
ஓசூர்:
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை நேரில் பார்வையிட்டார்.
பண்ணையில் உள்ள கால்நடைகள் , அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஆகியவை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் நலத் திட்டங்கள் இடைத் தரகர்கள் இன்றி மக்களை சென்று சேர்ந்துள்ளன.
ஏழைமக்கள் பயன்பெறும்வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்பட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு துறைமுகம் உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தில் நாட்டை உலக அளவில் வல்லரசாக்கும் திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கல் பீடு பகுதியை சேர்ந்த 11 சிறுமி மது அருந்திவிட்டு புகை பிடித்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விசாரணையில் சிறுமி தொடர்ந்து இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கல் பீடு பகுதியை சேர்ந்த 11 சிறுமி மது அருந்திவிட்டு புகை பிடித்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயதில் மூத்த பெரிய இளைஞர்களோடு சேர்ந்து அந்த சிறுமி மது குடிப்பதும் அதனைத் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணையில் சிறுமி தொடர்ந்து இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
- ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவர்முக்குளம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
இதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம், தோட்டக்கலைத்துறை சார்பில்
ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம் என பல்வேறு திடடங்கள் குறித்து விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் பிற துறை அமைச்சர்கள் இம்மாவட்டத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகள், கலெக்டர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் என 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.






