என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் கெலவரப்பள்ளி அணை  பகுதியில் அமைச்சர் ஆய்வு
    X

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் அமைச்சர் ஆய்வு

    • பெங்களூருவில் இருந்து வரும் கழிவு நீரினால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை பகுதி மாசடைகிறது.
    • ஓசூர் கெலவரப்பள்ளி அணையை, அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணை பகுதியில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வரும் கழிவு நீரினால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை பகுதி மாசடைந்து, அணையிலிருந்து வெளியேறும் நீரினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின்போது, அமைச்சருடன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.முருகன்,செங்குட்டுவன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசன், நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் குமார், ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×