என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1.3 லட்சம்   நகைகளை திருடிய வாலிபர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1.3 லட்சம் நகைகளை திருடிய வாலிபர் கைது

    • விவசாயி வீட்டில் நகைகளை திருடியவர் சிக்கினார்.
    • கையும்,களவுமாக மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் என்.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி. (வயது 45). விவசாயியான நேதாஜி தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள வயலுக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் பீரோவில் இருந்த ரூ.1.3 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தம் போட்டு அக்கம்பக்க த்தினரை வரவழைத்த நேதாஜி அந்த வாலிபரை கையும்,களவுமாக மடக்கி போலீசில் ஒப்படைத்தார். காவேரிப்பட்டினம் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தபோது சிக்கிய வாலிபர் போச்சம்பள்ளியை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×