என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த மினி பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்
ஊத்தங்கரை அருகே மினி பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்
- மினி பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- விபத்தில் ஓட்டுனரின் கால் துண்டானது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மேட்டூர் சூளகரை பகுதியை சேர்ந்த 25 பேர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி, தனியார் பள்ளியின் எதிரே வந்த போது மினிபஸ் வாகனத்தின் முன் டயர் வெடித்தது. இதில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 14 பேர் படுகாயமடைந்து அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
மேலும் வாகனம் ஓட்டி வந்த திருவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதி முருகன் என்பவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






