என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  மாணவி மர்ம சாவு-  தூக்கில் பிணமாக தொங்கினார்
    X

    கிருஷ்ணகிரியில் மாணவி மர்ம சாவு- தூக்கில் பிணமாக தொங்கினார்

    • மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள செம்மபுரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சுமித்ரா. இவர்களது மகள் அர்பிதா (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நரசிம்மன் தனது மனைவி, மகளை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனால் சுமித்ராவும்,அர்பிதாவும், சுமித்ராவின் தாய் ராஜம்மாளுடன் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ராஜம்மாளும், சுமித்ராவும் வெளியே சென்ற நிலையில் அர்பிதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    வெளியே சென்றிருந்த சுமித்ராவும்,ராஜம்மாளும் திரும்பி வந்து பார்த்தபோது அர்பிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமித்ரா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மகள் அர்பிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து போலீசார் அர்பிதாவின் உடலை கைப்பற்றி தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமித்ராவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அர்பிதாவை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    9-ம் வகுப்பு மாணவி தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×