என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே   பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நேர்ந்த பரிதாபம்.
    • பாலத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் மஹேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பருடன் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்றுள்ளார்.

    வாகனத்தை முனியப்பன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த முனி யப்பன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×