என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தருமபுரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 630 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரா ட்சிக்குட்பட்ட அவ்வை யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறு வதற்காக மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்

    இம்முகாமில் மாற்றுத்தி றனாளிகள் தங்களுக்கு தேவையான முடநீக்கு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண்மருத்துவர், மனநல மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறுவும் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும், மாற்றுத்திற னாளி களுக்கான அடை யாள அட்டை பதிவு மற்றும் நலவாரிய பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கான முகவர்கள் நியமனம் போன்ற பல்வேறு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் பெறும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

    தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி நகராட்சிக்குட்ப்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 630-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் இராஜராஜன், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் உட்பட தொடர்பு டைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி அருகே 2 பேரை தாக்கியவர் கைதானார்.
    • அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள கருக்கஞ்சவடி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 39). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் எதிரொலியாக நீலமேகம் ராஜாவை தாக்கியுள்ளார்.

    இதை தடுக்க வந்த ராஜாவின் நண்பர் குப்புசாமி என்பவரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த 2 பெரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ராஜா தந்த புகாரின் பேரில் காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து நீளமேகத்தை கைது செய்தனர்.

    • ஓசூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • சப்-கலெக்டர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.

    ஓசூர், 

    தமிழ்நாடு முழுவதும், நாளை(13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

    இந்த நிலையில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று பள்ளி பேருந்துகள் சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது.

    ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி. அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வித் துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முகாமில் கலந்துகொண்ட தனியார் பள்ளி பேருந்து களின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு, குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும், குழந்தைகள், பேருந்துகளில் ஏறும்போதும், இறங்கும்போ தும் அவர்களிடம் பொறுமை காட்ட வேண்டும், பாதுகாப்பாக ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி சப்- கலெக்டர், ஏ.எஸ்.பி, வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முகாமில் பேசினார்கள்.

    பின்னர், சப்- கலெக்டர் தேன்மொழி, பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தார். முதல்கட்டமாக, 186 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், தீயணைப்பு அலுவலர்கள் மாது, ராஜா தலைமையில், பேருந்துகளில் எதிர்பாராத தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்விளக்கம் மற்றும் போலி ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • தேன்கனிக்கோட்டை அருகே 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
    • மீட்கப்பட்ட சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள மலை கிராமங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்த கிராமங்களில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதை அரசு அதிகாரிகளும் தகவலறிந்து நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மூன்று சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாலம் ஊராட்சிக்குட்பட்ட கோபனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், கொடகரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும, தொட்ட மஞ்சி ஊராட்சிக்குட்பட்ட சிக்கமஞ்சு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ஆக இந்த மூன்று சிறுமிகளுக்கும் தொட்ட மஞ்சு அருகே உள்ள கோவிலில் இன்று நடைபெற இருந்தது. இதற்காக மூன்று குடும்ப வீட்டாரும் திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி தனிப்பிரிவு காவலர் நவீத் மற்றும் போலீசார் , அஞ்செட்டிவருவாய் ஆய்வாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி, குழந்தைகள் நல அலுவலர் மாதப்பன் ஆகியோர் நேற்று அர்த கிராமங்களில் உள்ளசிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அந்த மூன்று சிறுமிகளுக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது உறுதியானது. சிறுமிகளின் பெற்றோரிடம் சிறுமிகள் திருமண வயதை எட்டவில்லை என கூறி திருமணத்தை நிறுத்தும் படி கூறினர் .

    பெற்றோர்கள் திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடுகளும் செய்து விட்டோம் என கூறி பெற்றோர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை மீறி திருமணம் செய்தால் பெற்றோர் மீதும் மணமகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனால் பெற்றோர்கள் சமாதானம் அடைகின்றனர் இதனால் மூன்று சிறுமிகளும் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்ந்து மூன்று சிறுமிகளையும் மீட்டு கிருஷ்ணகிரி குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்தில் லஞ்சம், மின்சாரத்தில் லஞ்சம். தமிழ்நாட்டில்தான் அணில் நடமாட்டத்தால் மின்சாரம் தடைபடுகிறது.
    • தி.மு.க. ஆட்சியில், இந்து கடவுளை இழிவுபடுத்தி னால் மாலை போட்டு கொண்டா டப்படுகிறது.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொது செயலாளர் வி.எம். அன்பரசன், தென்பண்ணையார் பால தேவராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விவேகானந்தன், சூளகிரி ஒன்றிய தலைவர் லஷ்மிபதி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு துணை தலைவர் மஞ்சுநாத்

    இதில் கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஆட்சி மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கியிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலை இன்று மாறியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தின், எந்த பகுதிக்கு சென்றாலும் பிரதமர் மோடியின் ஏதாவது ஒரு திட்டம், செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    ஓசூர், கிருஷ்ணகிரி பகுதி வளர்ச்சியில், பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இந்த பகுதிகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் தீர்க்கமான முடிவு கொண்டுள்ளார்.

    இந்தியாவில் பல லட்சம் கிராமங்கள் இருந்தாலும், 100 சதவீத டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், வறுமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் தாலுக்காவில் உள்ள மஜீத் கொல்லஹள்ளி என்ற கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார்.

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேண, ரூ.5,000- அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் நலனை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2014-ல் 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு இருக்கவில்லை. இன்று எத்தனை பெரிய மாற்றம், எத்தனை வளர்ச்சி. டிஜிட்டல் இந்தியா மூலம் பணபரிவர்த்தனையில் இந்தியா முதல் நாடாக வந்துள்ளது.

    இந்த ஆட்சியில் லஞ்ச, லாவண்யம் இல்லை. 45 கோடி வங்கி கணக்குகளுக்கு, மத்திய அரசு இதுவரை அனுப்பி வைத்த தொகை 22 லட்சம் கோடி. மக்களை, இந்த ஆட்சியின் மையப்புள்ளியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சியில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும், பிரதமர் மோடியின் அரசை பாராட்டி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்தில் லஞ்சம், மின்சாரத்தில் லஞ்சம். தமிழ்நாட்டில்தான் அணில் நடமாட்டத்தால் மின்சாரம் தடைபடுகிறது.

    தி.மு.க. ஆட்சியில், இந்து கடவுளை இழிவுபடுத்தி னால் மாலை போட்டு கொண்டா டப்படுகிறது.

    சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தமி ழ்நாட்டில் காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. மக்களுக்கு நல்லாட்சி வழங்க ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    1 ஆண்டு தி.மு.க. ஆட்சி, வேதனை ஆட்சியாக, இருந்து வருகிறது. ஆத்ம நிர்பான் திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிதி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. உண்மையின் பக்கம், பாரதிய ஜனதா உள்ளது. முற்றிலும் இலவசமாக கச்சத்தீவை கொடுத்து விட்டு, 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதனை மீட்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். 2024-ல் துணை பிரதமராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.

    வருகிற 2024-ல், மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. தமிழ்நாட்டிலிருந்து 25 பேர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் கிருஷ்ணகிரியிலிருந்து ஒரு எம்.பி.தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைவரும் சபதம் எடுத்து உழைக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். மேலும், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூட்டத்தில் பேசினார். 

    • பாசிப்பயருக்கு ஒரு குவிண்டாலுக்கு 475 ரூபாய் வழங்க வேண்டும்.
    • விளைவிக்காத 18 பயிர்களுக்கு மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    அன்றாடம் பயன்படுத்தும் நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமக வுண்டர் வெளி யிட்டுள்ள அறிக்கை:-

    மத்திய அரசு நேற்று முன்தினம், விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலையை அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

    எள்ளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாயும், சோயா பீன்ஸ் ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாயும், சூரியகாந்தி ஒரு குவிண்டாலுக்கு, 385 ரூபாயும், பாசிப்பயருக்கு ஒரு குவிண்டாலுக்கு, 475 ரூபாயும் என அதிகம் விளைவிக்காத 18 பயிர்களுக்கு மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.

    ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெல் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாயை மட்டுமே உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    பஞ்சாப் முதல் தமிழகம் வரை அதிக அளவில் நெல் பயிரிடப்படுகின்றன. ஆனால் நெல்லுக்கான விலையை உயர்த்தாமல் மத்திய அரசு நெல் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. இவற்றை மறுபரிசீலனை செய்து நெல் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் உயர்த்தியும், மாநில அரசு ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாய் ஆதார விலையாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு தனது அறிக்கையில் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு கல்விப் பணிகளில் தொடர்ந்து செய்து வருகிறது.
    • ரூ.4.1 லட்சம் மதிப்பிலான டின்னர் செட்டுகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கப்பரிசுகள், பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் அமைக்க உதவுதல் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு கல்விப் பணிகளில் தொடர்ந்து செய்து வருகிறது.

    அந்த வகையில் 200 ஆண்டு காலமாகக் கல்விப்பணியில் சிறப்புற்று விளங்கி வரும் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மாண்ட்போர்ட் சபை சகோதரர்களால் வழி நடத்தப்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் பணியாற்றும் 102 ஆசிரியர்களின் பணியைப் பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் ரூ.4.1 லட்சம் மதிப்பிலான டின்னர் செட்டுகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனர் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் பாராட்டியதுடன் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்னும் வகையில் ஆசிரியப் பெருமக்கள் மேன்மேலும் தங்கள் பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும், அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பணியைச் சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    • 90 மாணவ, மாணவிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
    • 60 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.எம்.கிரியர்ஸ் பிரைவேட் லிமிட் சென்னை ஆகியவை இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டு எந்திரவியல், ஆட்டோ மொபைல் மற்றும் டூல் அண்ட், டை துறையை சேர்ந்த 90 மாணவ, மாணவிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    அதில் 60 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றனர். முன்னதாக கல்லூ ரியின் முதல்வர் எழிலரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் அரங்கநாதன், செயலாளர் ராஜா அண்ணாமலை, இணை செயலாளர் சுடலிலட்சுமி, துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் 60 மாணவ, மாணவியரின் பணியாணையை ஐ.எம். கிரியர்ஸ் பிரைவேட் லிமிட் சென்னையின் மேலாளர்கள் தியாகராஜன் மற்றும் கனகவேல் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளரிடம் வழங்கினர்.

    • காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீ காளி யம்மனுக்கு விமான கோபுர கலசங்களுக்கு புனித நீருற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக சுவாமிக்கு ஜூன் 7-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    ஜூன் 8- ந் தேதி புதன்கிழமை காலை மங்கள இசை, கணபதி பூஜை, யஜமானர்கள் சங்கல்பம், மண்டபசுத்தி, கோபூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவகிரகஹோமம், பூர்ணாகுதி, மங்கள ஆர்த்தி பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஜூன் 9-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் சுப்ரபாதம், மங்கள இசை, ஊர்தட்டு வரிசை அழைத்து வருதல் காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜை ஆரம்பம் தம்பதிகள் சங்கல்பம் மற்றும் யாத்ரா தானம், கோ-பூஜை, நாடிச்சந்தனம் நிகழ்ச்சி நடந்தது.

    அதனையடுத்து சிவாச்சா ரியர்களால் ஸ்ரீ காளி யம்மனுக்கு விமான கோபுர கலசங்களுக்கு புனித நீருற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பலித்தார். இத்துடன் அம்மனுக்கு திருகல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறுவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள வேளங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிராம புற சிறுவர்களுக்கு உடற்கல்வி, விளையாட்டு, உடற்பயிச்சியை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம நடைபெற்றது.

    இந்த முகாமில் வேப்பனப்பள்ளி, தீத்தம், நாச்சிகுப்பம், சிந்தகாம்பள்ளி, கொங்கனப்பள்ளி, நெடுசாலை, மகாராஜகடை, மாதேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட 10 வயது முதல் 20 வரையிலான சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் வினோத்குமார் தலைமையில் உடற்கல்வி, உடற்பயிச்சி, கிரிக்கெட் பயிற்சி,கபடி பயிற்சி, வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி மூலம் கிராமப்புற மக்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்கல்வி மூலம் ஊக்குவித்து பயிற்சிகளை அளித்து விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்தவும் மேலும் விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்து வேப்பனப்பள்ளி பகுதியி லிருந்து விளையாட்டுத் துறைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் உடற்கல்வி ஆசிரியர் வினோத்குமார் தெரி வித்தார்.

    இதைத் தொடர்ந்து இப்குதியில் இலவசமாக பயிற்சி பெற்ற மாணவர்க ளுக்கு பள்ளி முதல்வர் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிலையை உடற்கல்வி பயிற்சியில் 150-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சியை முடித்தனர்.

    • சேமிப்பு கணக்குகளை துவங்கி வாடிக்கையாளர்களிடம் இதுவரை சுமார் 2.50 கோடி ரூபாய் பணத்திற்கு மேல் வசூல் செய்துள்ளனர்.
    • பல வாடிக்கை யாளர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் உள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் 350 வாடிக்கையாளர்களைக் கொண்டு 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் குறு சிறு வியாபாரிகள் பணம் சேமித்து வருகின்றனர். மேலும் பல தவணை முறைகளில் சேமிப்பு கணக்குகளை துவங்கி வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்து இதுவரை சுமார் 2.50 கோடி ரூபாய் பணத்திற்கு மேல் வசூல் செய்துள்ளனர்.

    இந்த வசூல் செய்யும் பணத்தை வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப சிறு வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்குவது வழக்கம்.

    இந்த நிலையில்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் நடந்து வருகிறது.

    ஆனால் தற்பொழுது கடந்த ஆறு மாத காலமாக சிறுசேமிப்பு காலம் முடிந்து பணம் முழு தொகையை வட்டியுடன் திருப்பி வழங்கக்கூடிய சேமிப்பு கணக்கு பூர்த்தியடைந்த நிலையில் பல வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் உள்ளனர்.

    இதனால் வாடிக்கை யாளர்கள் தங்கள் அவசர தேவையான மருத்துவ செலவிற்கு கூட பணம் அவர்களிலிருந்து பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஆறு மாதங்கள் மட்டும் ஏறக்குறைய இரண்டு கோடிக்கு மேல் சேமிப்பு கணக்கு முழுமையடைந்து திருப்பி அளிக்காத நிலையில் உள்ளது.

    அதனால் தமிழக அரசு உடனடியாக இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்த நிறுவனத்தில் ஊத்தங்கரை கிளையில் பணம் கட்டிய வாடிக்கை யாளர்கள் சென்று விசாரித்தால் நாங்கள் இங்கு வசூல் செய்த பணத்தை சேலத்தில் உள்ள எங்களது அலுவலகத்தில் செலுத்தி விட்டோம். சேலத்தில் உள்ள எங்கள் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள்.

    கடன் வாங்கியவர் திருப்பி கட்டவில்லை. அதனால் எங்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை. அதனால்தான் உங்களுக்கு நாங்கள் திருப்பி பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எங்கள் வங்கியை இன்னொரு வங்கியுடன் இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இணைப்பு நடந்தவுடன் உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என கடந்த ஆறு மாத காலமாக இதே பதிலை கூறி வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

    • கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை.
    • மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மூக்கண்டஹள்ளி பகுதியை சேர்ந்தக்கார். வேலுசாமி. இவரது 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேலுசாமி தந்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×