என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே 3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
- தேன்கனிக்கோட்டை அருகே 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
- மீட்கப்பட்ட சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள மலை கிராமங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்த கிராமங்களில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதை அரசு அதிகாரிகளும் தகவலறிந்து நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மூன்று சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாலம் ஊராட்சிக்குட்பட்ட கோபனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், கொடகரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும, தொட்ட மஞ்சி ஊராட்சிக்குட்பட்ட சிக்கமஞ்சு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ஆக இந்த மூன்று சிறுமிகளுக்கும் தொட்ட மஞ்சு அருகே உள்ள கோவிலில் இன்று நடைபெற இருந்தது. இதற்காக மூன்று குடும்ப வீட்டாரும் திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி தனிப்பிரிவு காவலர் நவீத் மற்றும் போலீசார் , அஞ்செட்டிவருவாய் ஆய்வாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி, குழந்தைகள் நல அலுவலர் மாதப்பன் ஆகியோர் நேற்று அர்த கிராமங்களில் உள்ளசிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அந்த மூன்று சிறுமிகளுக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது உறுதியானது. சிறுமிகளின் பெற்றோரிடம் சிறுமிகள் திருமண வயதை எட்டவில்லை என கூறி திருமணத்தை நிறுத்தும் படி கூறினர் .
பெற்றோர்கள் திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடுகளும் செய்து விட்டோம் என கூறி பெற்றோர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை மீறி திருமணம் செய்தால் பெற்றோர் மீதும் மணமகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனால் பெற்றோர்கள் சமாதானம் அடைகின்றனர் இதனால் மூன்று சிறுமிகளும் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்ந்து மூன்று சிறுமிகளையும் மீட்டு கிருஷ்ணகிரி குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






