என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூக்காகவுண்டனூரில்   ஸ்ரீ காளியம்மன் கோவில்  மகா கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்த காட்சி.

    மூக்காகவுண்டனூரில் ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

    • காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீ காளி யம்மனுக்கு விமான கோபுர கலசங்களுக்கு புனித நீருற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக சுவாமிக்கு ஜூன் 7-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    ஜூன் 8- ந் தேதி புதன்கிழமை காலை மங்கள இசை, கணபதி பூஜை, யஜமானர்கள் சங்கல்பம், மண்டபசுத்தி, கோபூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவகிரகஹோமம், பூர்ணாகுதி, மங்கள ஆர்த்தி பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஜூன் 9-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் சுப்ரபாதம், மங்கள இசை, ஊர்தட்டு வரிசை அழைத்து வருதல் காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜை ஆரம்பம் தம்பதிகள் சங்கல்பம் மற்றும் யாத்ரா தானம், கோ-பூஜை, நாடிச்சந்தனம் நிகழ்ச்சி நடந்தது.

    அதனையடுத்து சிவாச்சா ரியர்களால் ஸ்ரீ காளி யம்மனுக்கு விமான கோபுர கலசங்களுக்கு புனித நீருற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பலித்தார். இத்துடன் அம்மனுக்கு திருகல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×