என் மலர்
கிருஷ்ணகிரி
- போச்சம்பள்ளி அருகே புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது.
- பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கீழ்மைலம்பட்டி கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமலும், விவசாயிகள் மோட்டாரை இயக்கு முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைத்துக்கொடுத்து மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டுமென புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரங்கநாதனிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரங்கநாதன் போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் உமாரா ணியிடம் மனு கொடுத்ததின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பார்த்தபோது, புளியம்பட்டி கிராமத்தில் இருந்து கீழ்மைலம்பட்டி கிராமம் வரை புதிய மின்கம்பம்கள் நடப்பட்ட பிறகே புதிய மின்மாற்றி அமைக்கமுடியுமென தெரிவித்தனர். இதனை யடுத்து கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா மேரியை அணுகி கிராமத்தின் குறைகளை விளக்கி, புதிய மின்மாற்றியை அமைக்க உத்திரவு பெற்று வந்தார்.
இதையடுத்து மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து கிராம மக்கள் மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். 15 ஆண்டு கால கோரிக்கையான குறைந்த அழுத்த மின்சாரத்தை போக்கிய ஊராட்சி தலைவருக்கும், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு போச்சம்ப ள்ளி உதவி பொறியாளர் கார்த்திகேயன், மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட கீழ்மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
- நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி 23-வது வார்டிற்கு உட்பட்ட பானக்கார தெருவில், புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து, கால்வாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர் தேன்மொழி மாதேஷ், வட்ட பிரதிநிதி ராஜா, ஜெகநாதன், முனீர், ஜாவித்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- ஓசூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்தது.
- ரூ.1.8 லட்சம் நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் வசித்து வருபவர் கணபதி சுப்பிரமணியம் (53), இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணி செய்து வருகிறார்.
இவரது வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவை திறந்து அதில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1,80,000/- ஆகும். இது குறித்து கணபதி சுப்பிரமணியம், ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு முடிந்தது.
- இந்த வகுப்புகள் 5 நாட்கள் நடத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கொரோனா பெருந் ்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க, எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வியக்கம் 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் 1 முதல் 3ம் வகுப்பு படிக்கும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும், எழுத்தறி வையும் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கினை கொண்டுள்ளது. மேலும் 2022-23ம் ஆண்டு கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடந்த மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் பயிற்சியை கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, வட்டார அளவிலான பயிற்சி கடந்த 6-ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 1977 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 114 கருத்தாளர்களையும், 14 மைய ஒருங்கிணைப்பா ளர்களையும் கொண்டு 49 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) மோகன், துணை முதல்வர் அன்புமணி, பணி முன்பயிற்சித் தலைவர் மயில்சாமி மற்றும் அனைத்து கல்வியாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாசிக்க பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினர்.
- முழு தொகை செலுத்தியவர்கள் ஆணைகளை பெற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பில்லனகுப்பம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முழு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்திய 26 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு களுக்கான ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், பில்லனகுப்பம் திட்ட பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.47.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இதுவரை 137 பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது இரண்டாம கட்டமாக தலா ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் 26 குடியிருப்புகளுக்கு ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பில் கட்டபட்டுள்ள அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும், ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை ஆகியவற்றுடன் கட்டப்படடுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத் தில கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்நி லையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.யால் "ஆப்ரேசன் கந்து வட்டி" கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 10-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கந்து வட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம்ந டந்தது.
இதன் காரணமாக மகராஜகடை போலீஸ் நிலைய எல்லையில் கந்து வட்டியால்பா திக்கப்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர், உரிய ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில்பெ ரியபனமுட்லு கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மீது மகராஜகடை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், கோவிந்தசாமி வீட்டை சட்டப்படி சோதனை செய்து, இந்த வழக்கில்ச ம்பந்தப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் அதன் நகலை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்எ வரேனும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன்அ ருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலோ புகார் அளித்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி நகராட்சியில் தூய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில், நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப்த லைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி அலுவலகத்தில், உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 25-வது வார்டில் உள்ள தினசரி மார்கெட் பகுதியில் பொதுமக்களிடையே மக்கும்கு ப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பெங்களூரு சாலையில் துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வ கையில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் புதிய பஸ்நி லையத்தில் உள்ள பொது கழிப்பிடம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில்வா ர்டு எண்10 மற்றும் 11 பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளும்நி கழ்ச்சியும் நடந்தது.
இதை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாதேஸ்வரன், சந்திரகுமார், கவுன்சிலர்கள்செ ந்தில்குமார், சுனில்குமார், பாலாஜி, முகமது ஆசிப், தேன்மொழி மாதேஷ், புவனேஸ்வரி, மதன்ராஜ், சக்திவேல்முருகன், மத்தீன், பிர்தோஸ்கான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கராமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் நடந்தது.
- 358 மனுக்களை பெற்று உடனே தீர்வு கண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பீமாண்டப்பள்ளி, ஊத்தங்கரை பூசாரி்கொட்டாய், போச்சம்பள்ளி சந்தூர், பர்கூர் காமாட்சிபுரம், சூளகிரி கும்மளம், ஓசூர்அ ச்செட்டிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை தண்டரை, அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டி ஆகிய இடங்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்குதல், சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு பெறுதல், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் உள்பட 391 பேர் மனுக்கள் அளித்தனர். இதில், 358 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது; 33 மனுக்கள் நிலுவையில்உள்ளது. பீமாண்டப்பள்ளியில் நடைபெற்ற பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோபு தலைமை தாங்கி புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
மேலும்நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்படும்எ ன்றார். இதில், வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ெவலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
- இதில் குறைந்த செலவில் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வெலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளின் தீவன மேலாண்மை-குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்த தொழில்நுட்ப விளக்க பயிற்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், அதன் செயல்பாடுகள், கால்நடைகளின் தீவன மேலாண்மை & குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள், கறவையின் உற்பத்தியில் கலப்பு தீவனம், உலர் தீவனம், ஊறுகாய் புல் தயாரிக்கும் தொழில்நு ட்பங்களை யும், அதன் முக்கியத்து வம் கறத்தும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.
கால்நடை மருத்துவர் டாக்டர் பிரபாவதி, கால்நடை களுக்கு தேவையான நல்ல தரமான தீவனங்கள், புண்ணாக்கு போன்ற புரதச் சத்துள்ள கலப்பு தீவனம், கால்நடை களை பராமரிக்கும் முறைகள், தானிய வகைகளை அரைத்து கொடுக்கும் முறைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார்.
கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் எலிசபெத்மேரி, உழ வர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முத்துசாமி, தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் மற்றும் பார்வதி ஆகியோர் செய்திருந்தனர்.
- ஒசூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் நடந்தன.
- மேயர் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஒசூர் மாநகரில் "என் குப்பை எனது பொறுப்பு' என்னும் நகரப் பகுதிகளின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.
ஒசூர் மாநகரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம், பகுதி வாரியாக குப்பைகள் அகற்றப்பட உள்ளன.
15 நாட்கள் இந்த தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான நேற்று, ஒசூர் பஸ் நிலையம் அருகே குப்பைகளை சேகரித்து ஒசூர் மாநகர மேயர் சத்யா தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஊத்தங்கரை அருகே இயற்கை பண்ணையம் குறித்து பயிற்சி வழங்கினர்.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஆண்டியூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் காய்கறிப் பயிர்களில் இயற்கை பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியானது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை தலைமையில் நடைபெற்றது. அவர் பேசும் போது காய்கறிப் பயிர்களில் வேளாண்மை செய்வது குறித்தும் சாகுபடி செய்ய இயற்கை பண்ணையம் குறித்துப் பேசினார். மேலும் இயற்கை பண்ணையம் செய்வோருக்கு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விளக்கினார்.
மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஜோதி பேசும்போது விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பது குறித்தும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்ப குறித்தும் விளக்கினார். மேலும் ஊத்தங்கரை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் நன்றி கூறினார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி செய்திருந்தார் .
- ம த்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் சிக்கினார்.
- அவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மனைவி மாலா (வயது 35). மாலாவிடம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மேகநாதன் (வயது 23) என்ற இளைஞர் நேற்று ஈச்சங்காடு பகுதிக்கு சென்று உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் , ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து மாலா மத்தூர் காவல் நிலையத்தில் இளைஞர் மேகநாதன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இளைஞர் மேகநாதன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ததுடன் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.






