என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1977 பேருக்கு 5 நாள் பயிற்சி நிறைவு
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு முடிந்தது.
- இந்த வகுப்புகள் 5 நாட்கள் நடத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கொரோனா பெருந் ்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க, எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வியக்கம் 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் 1 முதல் 3ம் வகுப்பு படிக்கும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும், எழுத்தறி வையும் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கினை கொண்டுள்ளது. மேலும் 2022-23ம் ஆண்டு கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடந்த மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் பயிற்சியை கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, வட்டார அளவிலான பயிற்சி கடந்த 6-ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 1977 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 114 கருத்தாளர்களையும், 14 மைய ஒருங்கிணைப்பா ளர்களையும் கொண்டு 49 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) மோகன், துணை முதல்வர் அன்புமணி, பணி முன்பயிற்சித் தலைவர் மயில்சாமி மற்றும் அனைத்து கல்வியாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்துள்ளனர்.






