என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்மைலம்பட்டி பகுதியில அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் உமாராணி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
போச்சம்பள்ளி அருகே புதிய மின்மாற்றி திறப்பு
- போச்சம்பள்ளி அருகே புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது.
- பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கீழ்மைலம்பட்டி கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமலும், விவசாயிகள் மோட்டாரை இயக்கு முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைத்துக்கொடுத்து மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டுமென புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரங்கநாதனிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரங்கநாதன் போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் உமாரா ணியிடம் மனு கொடுத்ததின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பார்த்தபோது, புளியம்பட்டி கிராமத்தில் இருந்து கீழ்மைலம்பட்டி கிராமம் வரை புதிய மின்கம்பம்கள் நடப்பட்ட பிறகே புதிய மின்மாற்றி அமைக்கமுடியுமென தெரிவித்தனர். இதனை யடுத்து கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா மேரியை அணுகி கிராமத்தின் குறைகளை விளக்கி, புதிய மின்மாற்றியை அமைக்க உத்திரவு பெற்று வந்தார்.
இதையடுத்து மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து கிராம மக்கள் மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். 15 ஆண்டு கால கோரிக்கையான குறைந்த அழுத்த மின்சாரத்தை போக்கிய ஊராட்சி தலைவருக்கும், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு போச்சம்ப ள்ளி உதவி பொறியாளர் கார்த்திகேயன், மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட கீழ்மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.






