என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிராமத்தில் புகையிலை விற்பனை செய்துள்ளனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் உத்தனப்பள்ளி ஸ்டேஷன் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்ற தெரியவந்தது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் வயசு (26) மற்றும் கவுரிபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி வயது (48) பீர்ஜேபள்ளியை சேர்ந்த பிரபு வயது (34)ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டது.
    • நலத்திட்ட உதவிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓசூர் 14-வது வார்டுக்குப்பட்ட லட்சுமிநாராயணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறுவர்,சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • வீட்டின் முன் பைக்கை நிறுத்திய பைக் திருட்டு.
    • பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த தட்டசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் வயது (40.) விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து குமார் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தட்டச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் ராமச்சந்திரன்(25) என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • 93 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.
    • ஜூஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று ஜூஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 93 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதன் மதிப்பு ரூ.73,000- ஆகும்.

    மேலும் விசாரணையில், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தென்கலை கிராமத்தை சேர்ந்த முகமது கனி(35) மற்றும் ரஹீம் ஆகியோர் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.இதையடுத்து அவற்றையும், ரூ 2 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் முகமது கனியை கைது செய்தனர்.போலீசாரின் சோதனையின் போது தப்பி ஓடிவிட்ட ரஹீமை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயம்.
    • போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஊத்தங்கரை,


    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (எ ) முருகன்.

    இவரது மகள் ப்ரீத்தி (வயது 18). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் ப்ரீத்தி குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து அவரது தாய் நாகம்மாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சிமெண்ட் சீட்டை சுத்தம் செய்த போது தவறி விழுந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்ததால் உயிரிழந்த பரிதாபம்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் கரியண்ண கவுடா (வயது64), கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று,தங்கள் வீட்டு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட்ஷீட்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. குடும்பத்தினர் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கரியண்ண கவுடா உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது.
    • காதை பிளக்கும் வகையில் ஹாரன் அடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதிகளிலும், மற்றும் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி, முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது.

    மற்ற வாகன ஓட்டிகளை, இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    தவிர, சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களையும், ஸ்கூட்டர்களையும் ஓசூர் நகர பகுதிகளில் சர்வ சாதாரணமாக ஓட்டிச்செல்வதும், மற்றவர்களுக்கு இடையூறு செய்து, காதை பிளக்கும் வகையில் ஹாரன் அடித்துச் செல்வதும் அதிகரித்துவிட்டதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே இதனை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசம் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். 

    • போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்த 2 டிரைவர்களும் தப்பியோடி விட்டனர்.
    • 2 யூனிட் ஜல்லிக்கற்கள் பறிமுதல்

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசார் கதிரேபள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 2 யூனிட் ஜல்லிக்கற்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.8,000 ஆகும்.

    இதேபோல் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியில் 4 யூனிட் எம்.சாண்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.14,000 ஆகும். இவை அத்திமுகத்திலிருந்து ஓசூருக்கு கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிவிட்ட 2 டிரைவர்களையும் தேடி வருகின்றனர்.

    இதேபோல், பேரிகை போலீசார் புக்கசாகரம் பகுதி சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக, ஓசூருக்கு டிப்பர் லாரியில் கடத்தி வந்த மூன்றரை யூனிட் ஜல்லிகற்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1,470 ஆகும். தப்பியோடிவிட்ட டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.
    • மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது என ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் தெரிவித்தார்.

    ஓசூர், 

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளிபிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜூஜூவாடி, பாகலூர் மற்றும் நாரிகானபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (செவ்வாய்க்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஜூஜூவாடி, மூக்கண்டபள்ளி, தர்கா,பேகேபள்ளி, பேடரபள்ளி, அரசனட்டி சின்ன எலசகிரி, சிட்கோ பேஸ் 1-லிருந்து சூர்யா நகர், 131 காமராஜ்நகர்,பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், எழில்நகர், ராஜேஸ்வரி லே அவுட் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல், பாக லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கக்கனூர்,கொத்தப் பள்ளி,எஸ்.இ. பள்ளி, சிச்சிருகானபள்ளி, பெலத்தூர், லிங்காபுரம், ஆலூர், கொடியாளம், சொக்கரசனபள்ளி, பெலத்தூர், மாரசந்திரம், பைரசந்திரம், சூடாபுரம், சேவகானபள்ளி, ஜி. மங்கலம், நல்லூர், ஏ.சேவகானபள்ளி,குடி செட்லு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மற்றும் நாரிகானபுரம், நந்திமங்கலம், சூட கொண்டபள்ளி, கெல வரப்பள்ளி, பேரிகை, முதுகுறுக்கி, நெரிகம், வெங்கடேசபுரம், அத்திமுகம், கே.என்.தொட்டி, வனகனபள்ளி, எலுவப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டீ நன்றாக இல்லை எனக் கூறி அவரிடம் தகராறு செய்தார்.
    • மிரட்டல் விடுத்து திடீரென கத்தியால் தாக்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜாபர் தெருவை சேர்ந்தவர் ரியாஸ்பாஷா (வயது56),

    இவர் ராயக்கோட்டை சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், ஷெனான் (34) என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    இந்தநிலையில், நேற்று ஓசூர் சாந்திநகரை சேர்ந்த சமீர் அகமத் (24) என்பவர் டீ குடிக்க வந்தார். பின்னர், ஷெனானை அழைத்து, டீ நன்றாக இல்லை எனக் கூறி அவரிடம் தகராறு செய்தார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், அவருக்கு மிரட்டல் விடுத்து திடீரென கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த ஷெனான், சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார், சமீர் அகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பஸ்சில் லக்கேஜ்க்கு தனியாக டிக்கட் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
    • வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரோஜா செருப்பால் கோவிந்தராஜை அடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை செண்டவர் கோவிந்தராஜ்(வயது 48). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கோவிந்தராஜ் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெகதேரி செல்லும் டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். அப்போது சரோஜா என்ற பெண்ணும், மற்றொரு பெயர் தெரியாது ஆணும் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

    அவர்கள் லக்கேஜ் கொண்டு வந்துள்ளனர். அதற்கு தனியாக டிக்கட் எடுக்கவேண்டும் என்று கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரோஜா செருப்பால் கோவிந்தராஜை அடித்துள்ளார். அவருடன் வந்தவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜ் தந்த புகாரின் பேரில் சரோஜாவை கைது செய்த போலீசார் அவருடன் வந்தவரை தேடி வருகின்றனர்.

    • முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • வீட்டில் விஷம் குடித்த அவர் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள பங்கா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா வயது (60). இவருக்கு நீண்ட நாட்களாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.

    இதனால் மனம் உடைந்த நாகப்பா சம்பவத்தன்று வீட்டில் வைத்து விஷம் குடித்தார். அவரை மீட்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன் திம்மராஜ் உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்ததின் போரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×