என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஜல்லிகற்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
- போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்த 2 டிரைவர்களும் தப்பியோடி விட்டனர்.
- 2 யூனிட் ஜல்லிக்கற்கள் பறிமுதல்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசார் கதிரேபள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 2 யூனிட் ஜல்லிக்கற்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.8,000 ஆகும்.
இதேபோல் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியில் 4 யூனிட் எம்.சாண்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.14,000 ஆகும். இவை அத்திமுகத்திலிருந்து ஓசூருக்கு கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிவிட்ட 2 டிரைவர்களையும் தேடி வருகின்றனர்.
இதேபோல், பேரிகை போலீசார் புக்கசாகரம் பகுதி சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக, ஓசூருக்கு டிப்பர் லாரியில் கடத்தி வந்த மூன்றரை யூனிட் ஜல்லிகற்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1,470 ஆகும். தப்பியோடிவிட்ட டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.






