என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்-   358 மனுக்களின் மீது தீர்வு
    X

    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்- 358 மனுக்களின் மீது தீர்வு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் நடந்தது.
    • 358 மனுக்களை பெற்று உடனே தீர்வு கண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பீமாண்டப்பள்ளி, ஊத்தங்கரை பூசாரி்கொட்டாய், போச்சம்பள்ளி சந்தூர், பர்கூர் காமாட்சிபுரம், சூளகிரி கும்மளம், ஓசூர்அ ச்செட்டிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை தண்டரை, அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டி ஆகிய இடங்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்குதல், சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு பெறுதல், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் உள்பட 391 பேர் மனுக்கள் அளித்தனர். இதில், 358 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது; 33 மனுக்கள் நிலுவையில்உள்ளது. பீமாண்டப்பள்ளியில் நடைபெற்ற பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோபு தலைமை தாங்கி புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.


    மேலும்நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்படும்எ ன்றார். இதில், வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×