என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன:  தமிழகத்தில் அனைத்து துறைகளிலும்  லஞ்சம் தலைவிரித்தாடுகிறது-  சூளகிரி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய காட்சி. 

    காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது- சூளகிரி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு

    • தமிழ்நாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்தில் லஞ்சம், மின்சாரத்தில் லஞ்சம். தமிழ்நாட்டில்தான் அணில் நடமாட்டத்தால் மின்சாரம் தடைபடுகிறது.
    • தி.மு.க. ஆட்சியில், இந்து கடவுளை இழிவுபடுத்தி னால் மாலை போட்டு கொண்டா டப்படுகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொது செயலாளர் வி.எம். அன்பரசன், தென்பண்ணையார் பால தேவராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விவேகானந்தன், சூளகிரி ஒன்றிய தலைவர் லஷ்மிபதி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு துணை தலைவர் மஞ்சுநாத்

    இதில் கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஆட்சி மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கியிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலை இன்று மாறியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தின், எந்த பகுதிக்கு சென்றாலும் பிரதமர் மோடியின் ஏதாவது ஒரு திட்டம், செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    ஓசூர், கிருஷ்ணகிரி பகுதி வளர்ச்சியில், பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இந்த பகுதிகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் தீர்க்கமான முடிவு கொண்டுள்ளார்.

    இந்தியாவில் பல லட்சம் கிராமங்கள் இருந்தாலும், 100 சதவீத டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், வறுமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் தாலுக்காவில் உள்ள மஜீத் கொல்லஹள்ளி என்ற கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார்.

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேண, ரூ.5,000- அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் நலனை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2014-ல் 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு இருக்கவில்லை. இன்று எத்தனை பெரிய மாற்றம், எத்தனை வளர்ச்சி. டிஜிட்டல் இந்தியா மூலம் பணபரிவர்த்தனையில் இந்தியா முதல் நாடாக வந்துள்ளது.

    இந்த ஆட்சியில் லஞ்ச, லாவண்யம் இல்லை. 45 கோடி வங்கி கணக்குகளுக்கு, மத்திய அரசு இதுவரை அனுப்பி வைத்த தொகை 22 லட்சம் கோடி. மக்களை, இந்த ஆட்சியின் மையப்புள்ளியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சியில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும், பிரதமர் மோடியின் அரசை பாராட்டி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்தில் லஞ்சம், மின்சாரத்தில் லஞ்சம். தமிழ்நாட்டில்தான் அணில் நடமாட்டத்தால் மின்சாரம் தடைபடுகிறது.

    தி.மு.க. ஆட்சியில், இந்து கடவுளை இழிவுபடுத்தி னால் மாலை போட்டு கொண்டா டப்படுகிறது.

    சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தமி ழ்நாட்டில் காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. மக்களுக்கு நல்லாட்சி வழங்க ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    1 ஆண்டு தி.மு.க. ஆட்சி, வேதனை ஆட்சியாக, இருந்து வருகிறது. ஆத்ம நிர்பான் திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிதி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. உண்மையின் பக்கம், பாரதிய ஜனதா உள்ளது. முற்றிலும் இலவசமாக கச்சத்தீவை கொடுத்து விட்டு, 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதனை மீட்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். 2024-ல் துணை பிரதமராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.

    வருகிற 2024-ல், மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. தமிழ்நாட்டிலிருந்து 25 பேர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் கிருஷ்ணகிரியிலிருந்து ஒரு எம்.பி.தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைவரும் சபதம் எடுத்து உழைக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். மேலும், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூட்டத்தில் பேசினார்.

    Next Story
    ×