என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
    • இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சரகர் தசரதராமன் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஷெரிப். இவரது மகன் முகமது சுபான் (வயது16).

    அதே பகுதியில்உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற முகமது சுபான் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் முகமது சுபான் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அப்துல் ஷெரிப் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிந்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், குறைதீர்க்கும் செல் போன் எண்ணை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர்மன்ற வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் செல்போன் எண் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், குறைதீர்க்கும் செல் போன் எண்ணை அறிமுகப்படுத்திய நகராட்சி தலைவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளின் வளர்ச்சிப் பணிகளில் தினமும் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுமக்களை சந்திக்கும் போது, அந்தந்த பகுதிகளில் நிலவும் குறைகளை தெரிவிப்பர். அவர்கள் தெரிவிக்கும் குறைகள் தீர்க்க நடவடிக்கை ஏடுக்கப்படும். இந்நிலையில், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் காணப்படும் குறைகளை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் செல்போன் எண் தற்போது அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் 74186-36909 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை புகாராக அரசு பணி நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரைக்குள் தெரிவிக்கலாம்.

    அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரம், நகர கட்டமைப்பு, குடிநீர் விநியோகம், புதைகுழி சாக்கடை (பாதாள சாக்கடை), தெரு விளக்கு ஆகியவற்றில் காணப்படும் குறைகளை மேற்கண்ட எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் குறித்து, உடனே நடவடிக்கை எடுக்க அந்தந்த துறைக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இவர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் குறித்து உடனே நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், புகார் தெரிவித்த நபரிடம் தாங்கள் தெரிவித்த புகார் சரி செய்யப்பட்டதா என்பதை கேட்டறிவார்கள். எனவே கிருஷ்ணகிரி நகராட்சியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிமாக சந்தை நடை பெறுகிறது.
    • தொகுப்பு கடைகள் கட்டப்பட்டு தினசரி மார்க்கட்டாக மாற்றியதால் இடங்கள் மிக குறைந்த அளவு காணப்படுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து புதன், வெள்ளி கிழமைகள் தோறும் ஆடு, கோழிகளை விற்பனைக்காக சூளகிரி பேரிகை சாலை யில்அமைந்த சந்தைக்கு கொண்டு வருவர்.

    இந்த சந்தை வளாகத்தில் சில ஆண்டுக்கு முன்பு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தொகுப்பு கடைகள் கட்டப்பட்டு தினசரி மார்க்கட்டாக மாற்றியதால் இடங்கள் மிக குறைந்த அளவு காணப்படுகிறது.

    ஆடு, கோழிகள் விற்பனைக்கு உகந்த இடம் இல்லாததால் பொதுமக்கள், வியாபாரிகள் இடத்தை மாற்றி தற்போது ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிமாக சந்தை நடை பெறுகிறது. இந்த தற்காலிக சந்தையை மாற்றி அரசு புதிய இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ரூ. 1.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுற்றுசுவர் கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    • ரூ. 70.75 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி, சூளாமலை, அஞ்சூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 70.75 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகளையும், சூளாமலை ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.76 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை, மக்காகுப்பை தரம் பிரிக்கும் கொட்டக்கை பணிகள், மற்றும் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுற்றுசுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து அஞ்சூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 16.40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுமான பணிகளையும், செந்தாரப்பள்ளி கிரா மத்தில், ரூ.12.70 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் உள்பட என மொத்தம் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டபணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும் இந்த பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    • உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு விற்கப்படும் காய்கறிகள், பழவகைகளின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    மேலும், உழவர்சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த, முதற்கட்டமாக 25 விவசாய உற்பத்தியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து, இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    மேலும் அவர் கூறுகையில், உழவர் சந்தையால் பயன்பெறும் நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மாலை நேர உழவர் சந்தை மூலம் அவர்களுக்கு தேவையான இதர வேளாண் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் மூலம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

    எனவே, இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழ வர் உற்பத்தியாளர் நிறுவ னங்கள், இது சம்பந்தமாக ஓசூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம்என்றார்.

    இந்த ஆய்வின்போது, வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல்துறையின் சார்பில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம், பாளேத்தோட்டம் பிரிவு சாலை, செல்லம்பட்டி பிரிவு சாலை, 4 வழி சாலை ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

    இதில் பாளேத்தோட்டம் பிரிவு சாலையில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    இதில் கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்தால் காவல் உதவி எண்ணிற்கும், குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

    பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் காவலன் ஆப்பை தங்களது செல்போனில் பதிவு செய்து அதில் உள்ள எமர்ஜென்சி பொத்தானை அழுத்தி காவல்துறையின் உதவியை எளிதில் பெற முடியும் என்ற ஆலோசனைகளை வழங்கினர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
    • போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் 42 ஊராட்சிகள், 417 கிராமங்கள் கொண்ட வளர்ந்து வரும் பெரிய நகரம் ஆகும்.

    இந்த ஊராட்சியில் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகள், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், தொழில்சாலைகள், பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சூளகிரி பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.இதனால் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    சூளகிரிபேருந்து நிலை யத்தில் இருந்து ஓசூருக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்கிறார்கள். இந்த பஸ்நிலையத்திற்கு காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல ஏராளமான மாணவ, மாணவிகள் வருகிறார்கள்.

    அப்போது அந்த மாணவி களிடம் இளைஞர்கள் சிலர் வம்பு செய்கிறார்கள். இதனால் சூளகிரி பஸ்நிலை யத்தில்பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    மேலும் முக்கிய சாலை களில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால் மாணவ, மாணவி களின் கல்வி பாழாகும் நிலை உருவாகிறது.

    சூளகிரி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

    • பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள இளங்களபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மனைவி மங்கம்மாள் (வயது 49). இவரது மகன் முருகேசன். இந்த நிலையில் நேற்று முருகேசன், மங்கம்மாள் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது காவேரிப் பட்டணம் அடுத்த சுண்டே குப்பம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள அலசநத்தம் லட்சுமி நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சலஜா (வயது56). இவர் கடந்த 24-ந் தேதி அன்று அப்பகுதியில் உள்ள சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
    • துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா கடை கோடி மலை கிராமமான உரிகம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, இயற்கை மரண நிவாரணம், புதிய ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உட் பட 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, அஞ்செட்டி வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுப்பிரியா, விமல் ரவிக்குமார், உரிகம் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்மா மகாதேவையா, கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னபசவம்மா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பூவிதன் நன்றி கூறினார்.

    • பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமை தாங்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் தேவராஜன் மற்றும் தீயனைப்பு வீரர்கள் வருவாய் துறையினர் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு மழை வெள்ளம் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும்.

    அதற்கான செயல்முறை விளக்கங்களை லைப் ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் மீட்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.

    இதில் வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டல பூஜையில் ஸ்ரீ வினாயகருக்கு சிறப்பு பூஜை, வாஸ்து பூஜை, 108 சங்கு அபிஷேக பூஜையும் நடந்தது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்று 48 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை மற்றும் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தது.

    மண்டல பூஜையில் ஸ்ரீ வினாயகருக்கு சிறப்பு பூஜை, வாஸ்து பூஜை, நவகிர பூஜை, கலச அபிஷேகமும் 108 சங்கு அபிஷேக பூஜையும், ஆலய மண்டல பூர்த்தி ஹோம சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையுடன் பூஜை நிறைவுற்றன.

    இச்சிறப்பு பூஜையில் ஸ்ரீ காளியம்மனை தரிசிக்க சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மூக்காகவுண்டனூர் பொதுமக்கள் மற்றும் தாய் வீட்டார், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் வழங்கப் பட்டது.

    ×