என் மலர்
கிருஷ்ணகிரி
- இருளர் இன மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
- மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விடும் அவல நிலை உள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பனமரத்துப்பட்டி காந்திநகர் பகுதியில் இருளர் இன மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு, 26 வீடுகளில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பிட வசதி, மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண் கூறுகையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் 2 முதல் 4 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வீட்டின் மேற்கூரைகள் மிகவும் மோசமான நிலையில் பெயர்ந்து விழுகிறது. மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஒழுகுவதால், இரவு முழுவதும் தூங்காமல் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தங்கள் கிராமத்திற்கு செல்ல, சாலை வசதி இல்லாமலும்,போதிய குடிநீர் இன்றி தவித்து வருகிறோம். இதனால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு, ஜாதிச்சான்று கேட்பதால், இதுவரை சேர்க்க முடியாத நிலை உள்ளது எனவும், ஒரு சில மாணவர்கள்9-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.மேற்படிப்பு படிக்க, ஜாதிசான்றிதழ் இல்லாததால், மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விடும் அவல நிலை உள்ளது.
நாங்கள் காட்டுக்குச் சென்று, விறகு வெட்டி கொண்டு வந்து விற்று வாழ்ந்து வருகிறோம். கிடைக்கும் கூலித் தொழிலுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகிறோம், நிரந்தரமான தொழில் இல்லாமல் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார்.
தமிழக அரசு, இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஜாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்றி தர வேண்டும் என, பகுதி இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநிலம் முழுவதும் இருந்து 11 அணிகள் கலந்து கொண்டன.
- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
திருச்சி கோ-கோ அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் திருச்சியில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து 11 அணிகள் கலந்து கொண்டன. இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட அணியினர், மாநில அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் பரிதா நவாப் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மகேஸ்வரி வெற்றி பெற்ற அணி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் பன்னாட்டு அளவிலான கோ-கோ போட்டி, வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை இந்தியா - நேபாள் அணிகளுக்கு இடையில், நேபாளில் நடக்க உள்ளது. இந்த போட்டியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 15 மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. நகர்மன்றத்தலைவர் பரிதா நவாப், நேபாளில் பங்கேற்கும் கோ-கோ அணியைப் பாராட்டி ஊக்கத்தொகையாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன், தலைமை ஆசிரியர் மகேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
- விவசாயிகள் பலருக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
போச்சம்பள்ளியில் உழவர் சந்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கலேரியில் நீர் செல்லும் கால்வாயை தூர்வாரிட வேண்டும்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பலருக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயி களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-
பிரதமரின் கிசான் திட்டத்தில் 8 ஆயிரம் பேரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் சென்றுள்ளது. அதனை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, பணம் வழங்கப்படுகிறது. நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் ்நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு களைஅகற்றுவதில் அலுவலர்கள் பாரபட்ச மின்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
- மாநகர செயலாளர்ஜெயராமன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
மத்திய பா.ஜ.க. அரசின், ஏழை மக்களின் மீதான பொருளாதார சுமைகளை கண்டித்தும், அரிசி,கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீதான 5 சதவீத வரிவிதிப்பை வாபஸ் பெறக்கோரியும் சி.பி.எம் கட்சி சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
ஓசூர் மாநகர, ஒன்றிய கமிட்டி சார்பில், ஓசூரில் எம்.ஜி .ரோடு காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர்ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி கண்டன உரையாற்றினார்.
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில செயலாளர் சஞ்சீவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்ததற்கு மத்திய அரசைக்கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் எதிரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சஞ்சீவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நிர்வாகிகள் வேல்முரு கன், சிவக்குமார், பழனிவேல், முருகன் மற்றும் தொமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் அண்ணாதுரை நன்றி கூறினார்.
- இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
- உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்.
காவேரிப்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார்.
முகாமினை வட்டார மருத்துவ அலுவலர்கள் தாமரைச் செல்வி, சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள், சுகாதார மேற்பார்வை யாளர் செந்தில்குமரன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரபு, காசநோய் சிகிச்சை பிரிவு சிவரஞ்சனி ஆகியோர் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை களை வழங்கினர். பணியாளர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு அப்போதே அதன் முடிவினை தெரிவித்து மருத்துவ குழுவினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் நித்தியா, கீதா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ், அமுதா, வருண், பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாருதி முருகன், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. 2-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தன.
அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தகராறில் 2 பேரும் இம்ரானை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
- மணிகண்டன் (28), சஞ்சீவ் குமார் (34) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இதற்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ மூலம் சென்று கொண்டிருந்தார்.
அப்ேபாது வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ஓரமாக நிற்கும்படி இம்ரான் கூறினார். இதனால் அவர்களிடைேய ஏற்பட்ட தகராறில் 2 பேரும் இம்ரானை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் காயம் அடைந்த இம்ரான் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இம்ரானை தாக்கிய மணிகண்டன் (28), சஞ்சீவ் குமார் (34) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் ராம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை சுயம்பு மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 10-ம் தேதி, ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
அதன் நிறைவு நாளை முன்னிட்டும் நேற்று, ஆடி அமாவாசை நாள் ஆதலாலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தினர். பின்னர், கோவிலின் நிர்வாகிகளான, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத், ஜெய்சங்கர் மற்றும் பக்தர்கள், அலங்க ரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை சுமந்து கோவிலை வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.
- ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 1,12,000 மெகாவாட் மின்சாரத்தை அனுப்ப முடியும்.
- 2015-ல் கிரா மப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 மணி நேரம் இருந்தது இப்போது சராசரியாக 22.5 மணி நேரங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்- அமைச்ச ரின் சிறப்பு திட்டமான ஒரு லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,368 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
மின்சார அமைச்சகம், தமிழக அரசின் மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மின்சார பெரு விழா நிகழ்ச்சி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் மின்சார பெருவிழா, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு செயல்பாட்டை எடுத்துக்காட்டவும், மின் துறையின் சாதனைகளை பறைசாற்றவும் உதவும் ஒரு தளமாகும். இதன் முக்கியமான அம்சங்கள் 1,63,000 சுற்று கிலோ மீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் இணைக்கப்பட்டு, நாடு முழுவதையும் ஒரே அலைவரிசையில், ஒரே மின் வினியோக கட்டமைப்பாக இணைக்கிறது.
லடாக் முதல் கன்னியாகுமாரி வரையிலும், மற்றும் கட்ச் முதல் மியான்மார் எல்லை வரை அமைந்த இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் வினியோக கட்டமைப்பாகும். இந்த மின் வினியோக கட்டமைப்பின் உதவி கொண்டு நாம் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 1,12,000 மெகாவாட் மின்சாரத்தை அனுப்ப முடியும்.
2015-ல் கிரா மப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 மணி நேரம் இருந்தது இப்போது சராசரியாக 22.5 மணி நேரங்கள் உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு (8 சதவிகிதம்) இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9,72,180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள், அரசு அலுவலர்கள் எடுத்த தொடர் நடவடிக்கை மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியதன் விளைவாக 2017-18-ம் ஆண்டில் அனைத்து குக்கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்க முடிந்தது.
மின்சாரத்தை தேவைக்கேற்ப உற்பத்தி செய்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்கி வருவதுடன் மலை கிராம பகுதிகளில் தாழ்வுநிலை மின்னழுத்தம் இருப்பதை சரிசெய்து, ஒரே சீரான மின்சாரம் வழங்க பவர் கிரீடு மற்றும் மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, பொது மேலாளர் ( பவர் கிரீடு) நிரஞ்சன் குமார், மனிதவள மேம்பாட்டு அலுவலர் .சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்டராம கணேஷ், சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மின்வாரிய பணியா ளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- இதுவரை 73 ஆயிரத்து 332 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர்.
- ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத் தொகை கிடைக்கும்.
கிருஷ்ணகிரி,
பிரதமமந்திரி கிஷான் கவுரவநிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவை புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம், வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 470 விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. தற்போது விவசாயிகளுக்கு 12-வது தவணை தொகையை பெறுதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமமந்திரி கிஷான் கவுரவநிதி திட்டத்தின் கீழ் இதுவரை 73 ஆயிரத்து 332 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 82 ஆயிரத்து 138 விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் இ-கே.ஒய்.சி. முறையில் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத் தொகை கிடைக்கும்.
பிரதம மந்திரி கிஷான் கவுரவநிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்திட தங்களது ஆதார் அட்டையுடன் இ-சேவை மையத்தையோ அல்லது தபால் அலுவலகத்தை அணுகி, தங்களது விரல் ரேகை மூலம் செய்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த முறையில் பாரதபிரதமரின் கவுரவநிதி திட்ட விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வினிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
- இது குறித்து பாகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி வினிதா (வயது21). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை.
இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வினிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
இது குறித்து பாகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






