search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டினம் பேரூராட்சி   பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்
    X

    காவேரிப்பட்டினம் பேரூராட்சி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்

    • இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
    • உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.

    காவேரிப்பட்டணம்.

    காவேரிப்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    முகாமினை வட்டார மருத்துவ அலுவலர்கள் தாமரைச் செல்வி, சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள், சுகாதார மேற்பார்வை யாளர் செந்தில்குமரன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரபு, காசநோய் சிகிச்சை பிரிவு சிவரஞ்சனி ஆகியோர் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை களை வழங்கினர். பணியாளர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு அப்போதே அதன் முடிவினை தெரிவித்து மருத்துவ குழுவினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் நித்தியா, கீதா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ், அமுதா, வருண், பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாருதி முருகன், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×