என் மலர்
நீங்கள் தேடியது "பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்"
- குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
- விவசாயிகள் பலருக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
போச்சம்பள்ளியில் உழவர் சந்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கலேரியில் நீர் செல்லும் கால்வாயை தூர்வாரிட வேண்டும்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பலருக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயி களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-
பிரதமரின் கிசான் திட்டத்தில் 8 ஆயிரம் பேரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் சென்றுள்ளது. அதனை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, பணம் வழங்கப்படுகிறது. நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் ்நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு களைஅகற்றுவதில் அலுவலர்கள் பாரபட்ச மின்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






