என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் காளியம்மன்.
மூக்காகவுண்டனூரில் ஸ்ரீ காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
- மண்டல பூஜையில் ஸ்ரீ வினாயகருக்கு சிறப்பு பூஜை, வாஸ்து பூஜை, 108 சங்கு அபிஷேக பூஜையும் நடந்தது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்று 48 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை மற்றும் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தது.
மண்டல பூஜையில் ஸ்ரீ வினாயகருக்கு சிறப்பு பூஜை, வாஸ்து பூஜை, நவகிர பூஜை, கலச அபிஷேகமும் 108 சங்கு அபிஷேக பூஜையும், ஆலய மண்டல பூர்த்தி ஹோம சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையுடன் பூஜை நிறைவுற்றன.
இச்சிறப்பு பூஜையில் ஸ்ரீ காளியம்மனை தரிசிக்க சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மூக்காகவுண்டனூர் பொதுமக்கள் மற்றும் தாய் வீட்டார், விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் வழங்கப் பட்டது.






