என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் இயங்கி வரும் ஆட்டு சந்தையை படத்தில் காணலாம்.
சூளகிரியில் நெடுஞ்சாலை ஓரமாக இயங்கி வரும் தற்காலிக ஆட்டு சந்தை- வேறு புதிய இடம் தேர்வு செய்ய வலியுறுத்தல்
- தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிமாக சந்தை நடை பெறுகிறது.
- தொகுப்பு கடைகள் கட்டப்பட்டு தினசரி மார்க்கட்டாக மாற்றியதால் இடங்கள் மிக குறைந்த அளவு காணப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து புதன், வெள்ளி கிழமைகள் தோறும் ஆடு, கோழிகளை விற்பனைக்காக சூளகிரி பேரிகை சாலை யில்அமைந்த சந்தைக்கு கொண்டு வருவர்.
இந்த சந்தை வளாகத்தில் சில ஆண்டுக்கு முன்பு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தொகுப்பு கடைகள் கட்டப்பட்டு தினசரி மார்க்கட்டாக மாற்றியதால் இடங்கள் மிக குறைந்த அளவு காணப்படுகிறது.
ஆடு, கோழிகள் விற்பனைக்கு உகந்த இடம் இல்லாததால் பொதுமக்கள், வியாபாரிகள் இடத்தை மாற்றி தற்போது ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிமாக சந்தை நடை பெறுகிறது. இந்த தற்காலிக சந்தையை மாற்றி அரசு புதிய இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






