என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் அறிவிப்பு"

    • கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், குறைதீர்க்கும் செல் போன் எண்ணை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர்மன்ற வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் செல்போன் எண் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், குறைதீர்க்கும் செல் போன் எண்ணை அறிமுகப்படுத்திய நகராட்சி தலைவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளின் வளர்ச்சிப் பணிகளில் தினமும் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுமக்களை சந்திக்கும் போது, அந்தந்த பகுதிகளில் நிலவும் குறைகளை தெரிவிப்பர். அவர்கள் தெரிவிக்கும் குறைகள் தீர்க்க நடவடிக்கை ஏடுக்கப்படும். இந்நிலையில், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் காணப்படும் குறைகளை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் செல்போன் எண் தற்போது அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் 74186-36909 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை புகாராக அரசு பணி நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரைக்குள் தெரிவிக்கலாம்.

    அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரம், நகர கட்டமைப்பு, குடிநீர் விநியோகம், புதைகுழி சாக்கடை (பாதாள சாக்கடை), தெரு விளக்கு ஆகியவற்றில் காணப்படும் குறைகளை மேற்கண்ட எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் குறித்து, உடனே நடவடிக்கை எடுக்க அந்தந்த துறைக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இவர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் குறித்து உடனே நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், புகார் தெரிவித்த நபரிடம் தாங்கள் தெரிவித்த புகார் சரி செய்யப்பட்டதா என்பதை கேட்டறிவார்கள். எனவே கிருஷ்ணகிரி நகராட்சியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    ×