search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்க   சூளகிரி பஸ் நிலையப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்-   சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    சூளகிரி பஸ்நிலையத்தை படத்தில் காணலாம்.

    குற்ற சம்பவங்களை தடுக்க சூளகிரி பஸ் நிலையப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
    • போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் 42 ஊராட்சிகள், 417 கிராமங்கள் கொண்ட வளர்ந்து வரும் பெரிய நகரம் ஆகும்.

    இந்த ஊராட்சியில் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகள், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், தொழில்சாலைகள், பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சூளகிரி பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.இதனால் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    சூளகிரிபேருந்து நிலை யத்தில் இருந்து ஓசூருக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்கிறார்கள். இந்த பஸ்நிலையத்திற்கு காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல ஏராளமான மாணவ, மாணவிகள் வருகிறார்கள்.

    அப்போது அந்த மாணவி களிடம் இளைஞர்கள் சிலர் வம்பு செய்கிறார்கள். இதனால் சூளகிரி பஸ்நிலை யத்தில்பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    மேலும் முக்கிய சாலை களில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பள்ளி செல்லாமல் பள்ளி சீருடை அணிந்து பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால் மாணவ, மாணவி களின் கல்வி பாழாகும் நிலை உருவாகிறது.

    சூளகிரி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×