என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல திட்ட உதவிகள்"

    • முதியோர் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • பிரமாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தருமபுரி,

    தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாதர் சங்க வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு முன்னாள் எம்.பி.யும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார். சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்றார். நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரேணுகாதேவி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அவர் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியோர்களுக்கு இலவச சேலை மற்றும் முதியோர் இல்லத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, மல்லமுத்து, கருணாநிதி, மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் முத்துலட்சுமி, கௌதம், பொன்மகேஸ்வரன், காசிநாதன், ரஹீம், ரவி, குமார், கட்சி நிர்வாகி இளைய சங்கர், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், கோமளவள்ளி ரவி, அன்பழகன், சம்பந்தம், கனகராஜ், சுருளிராஜன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஏலகிரி நடராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், பாண்டியன், முருகவேல், மாதேஸ்வரன், ஜெகன், ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் செய்திருந்தார்.

    • 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
    • துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா கடை கோடி மலை கிராமமான உரிகம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, இயற்கை மரண நிவாரணம், புதிய ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உட் பட 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, அஞ்செட்டி வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுப்பிரியா, விமல் ரவிக்குமார், உரிகம் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்மா மகாதேவையா, கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னபசவம்மா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பூவிதன் நன்றி கூறினார்.

    ×