என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நேற்று 15 - ஆம் ஆண்டு நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மன் திருக்கோயில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி தினத்தில் நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று 15 - ஆம் ஆண்டு நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி, காலை முதலே ஸ்ரீ நாகம்மனுக்கு விசேஷ அபிஷேகங்களும் நடத்தப்பட்டு மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, கூழ் பிரசாதத்தை வாங்கி சென்றனர்.

    நேற்று தொடங்கிய இந்த திருவிழா உற்சவம், வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீ நாகம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று ஆராதனைகள் நடைபெறும். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, அம்மனுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்றைய தினமே கலச கரகமும் எடுத்து நாக அம்மனுக்கு உற்சவம் நிறைவேற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி ஜெகன்நாத் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • ஊருக்கு சென்று விட்டு திரும்பிய சுதாகர் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போனதை கண்டு சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் சரகம் கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39).கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தனது மனைவி சுவேதா மற்றும் மகளுடன் வீட்டை பூட்டிக்கொண்டு தனது காரில் ஓசூர் சென்றுள்ளார்.

    இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சுதாகரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்த அந்த ஆசாமிகள் அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6,50 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    ஊருக்கு சென்று விட்டு திரும்பிய சுதாகர் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போனதை கண்டு சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர்.
    • பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் தினமும் சொந்த வேலையாகவும், அரசு வேலையாகவும் கிருஷ்ணகிரிக்கு தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது சென்று வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றின் மீது பாலத்தில் உள்ள மின் விளக்குகள் டியூப் லைட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு டியூப் லைட் கூட எரிவதில்லை.

    பாலத்தின் மீது லைட் எரிவது இல்லை என புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர். இதனால் பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது. இதேபோல காவேரிப்பட்டணம் -சேலம் மெயின் ரோட்டில் உள்ள காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் மின் விளக்குகள் சரியான முறையில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் மீது டியூப்லைட்கள் உள்ளன. இதில் வருகிற வெளிச்சம் போதுமானதாக இல்லை. மேலும் மின் விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் ஆற்றுப்பாலத்தில் தினமும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் மீது உள்ள டியூப் லைட்டுகளை மாற்றிவிட்டு எல்.இ.டி. பல்புகளை மாற்றினால் ஆற்றுப்பாலத்தில் நல்ல வெளிச்சமாக இருக்கும்.

    இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் பாலத்தில் மீது உள்ள ரோடுகள் பெயர்ந்து விட்டதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. இதை உடனடியாக சரி செய்து வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

    • 146.52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • ஜாமீன் நிபந்தனைகளை மீறிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: -

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, வெளி மாநில மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தற்போது வரையில் 33 ஆயிரத்து 145 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 84 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல 146.52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 56 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குட்கா, கஞ்சா கடத்தல் வழக்கில் மட்டும் 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதத்தில் கந்து வட்டி தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 13 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 20 கந்து வட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 68 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கொலை குற்றவாளிகள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் 146 பேர் மீது 109, 110 பிரிவில் வழக்குப்பதிவு செய்து உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஜாமீனில் வந்த குற்றவாளிகள், ரவுடிகள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், ஓசூர் உட்கோட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த், ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கையால் ஏரிநிலம் மீட்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்ப கரை ஊராட்சி செங்கோட சின்னஹள்ளி ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இந்த ஏரியில் சுமார் 6 ஏக்கருக்கு அதிகமான நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாய பயர்கள் மற்றும் கால்நடை தீவன பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இதை அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதன்பேரில் கெலமங்க லம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, உள்வட்ட நிலஅளவர் வீரபத்திரன், கிராம நிர்வாக அதிகாரி சசிகுமார், மற்றும் வருவாய்துறையினர், பொது மக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் தலைமையியலான போலீ சார் பாதுகாப்புடன்

    ஜே.சி.பி. வாகனம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இனிப்புகள் 10 கிலோ ஆர்டர் செய்துவிட்டு அதற்கு உரிய தொகையை அளிக்கும்பொழுது ரூ.1000 குறைவாக உள்ளது என கூறினார்.
    • பேக்கரிக்காரரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்ற நபர் திரும்ப வரவில்லை.

    சிங்காரப்பேட்டை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் நூதன முறையில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ள சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேமராவில் சிக்கி உள்ள நபர் ஏற்கனவே மாமிச கடைக்கு சென்று விழாவிற்கு ஒன்றிற்கு மாமிசம் வேண்டும் என கூறி 20 கிலோ மாமிசத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த மாமிச கடை உரிமையாளரின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டில் விசேஷம் நடைபெற்று வருகிறது.

    அதற்கு இனிப்புகள் வாங்க எந்த கடை நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளார். கேட்டு விட்டு 20 கிலோ மாமிசத்தை தயார் செய்து வைக்க சொல்லி கூறிவிட்டு பிறகு பேக்கரிக்கு வந்துள்ளார். அங்கு இனிப்புகள் 10 கிலோ ஆர்டர் செய்துவிட்டு அதற்கு உரிய தொகையை அளிக்கும்பொழுது ரூ.1000 குறைவாக உள்ளது.

    அந்த பணத்தை எடுத்து வர ஏ.டி.எம். சென்டருக்கு செல்ல வண்டி இரவல் தர வேண்டும் என்று பேக்கரிக்காரரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்ற நபர் திரும்ப வரவில்லை. இதில் ஏமாற்றம் அடைந்த பேக்கரி உரிமையாளர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துசி.சி.டி.வி. காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார், பூமி பூஜைகள் செய்து சாலை அமைக்கும் பணியையும், கால்வாய் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சி, நெக்குந்தியான் கொட்டாய் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 120 மீட்டர் தொலைவிற்கு, 4 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

    அதே போல், சோக்காடி ஊராட்சி கருத்தமாரம்பட்டி கிராமத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இந்த இரண்டு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார், பூமி பூஜைகள் செய்து சாலை அமைக்கும் பணியையும், கால்வாய் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர் ஜெயபால், வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், காட்டிநாயனப்பள்ளி துணைத் தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் பவுன், முன்னாள் ஊராட்சி செயலாளர் செவத்தான், கார்த்திக் பால்ராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூப்பறிக்க சென்ற போது ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
    • நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்கொட்டப்பா (வயது 70).

    பூ வியாபாரியான இவர் கடந்த 1-ந்தேதி பூப்பறிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ஏரியில் தவறி விழுந்துள்ளார்.

    இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு 11 மணி முதல் வங்கியின் அலாரம் அடித்துக்கொண்டுள்ளது.
    • இரவு ஒலிக்க தொடங்கிய அலாரம் இன்று காலை வரை ஒலித்துக்கொண்டிருந்தும் ஒரு போலீஸ் கூட அந்த பக்கம் வந்து எட்டிப்பார்க்கவில்லை.

    மத்தூர்,

    கிரிஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசுடைமை வங்கி ஒன்று உள்ளது. இங்கு பர்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வரவு,செலவு செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு பெட்டக வசதியும் இந்த வங்கியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி முதல் வங்கியின் அலாரம் அடித்துக்கொண்டுள்ளது. இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் வங்கியில் ஏதேனும் கொள்ளை முயற்சி போன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறதா என்று குவிந்தனர்.

    ஆனால் அப்படி எந்தவித சம்பவமும் நடக்கவில்லை. ஒருவேளை எலியின் சேட்டையாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அலாரம் தொடர்ந்து ஒலித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இந்த வங்கியின் அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஆனால் இரவு ஒலிக்க தொடங்கிய அலாரம் இன்று காலை வரை ஒலித்துக்கொண்டிருந்தும் ஒரு போலீஸ் கூட அந்த பக்கம் வந்து எட்டிப்பார்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் வந்து வங்கியை திறந்த பிறகுதான் அலாரம் ஒலிப்பதற்கான காரணம் தெரிய வரும்.

    • ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
    • நகர்புறத்திலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் பிரகாஷ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். நகர்புறத்திலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    55 வயதைக் கடந்த அனைத்து முதியோர்க ளுக்கும், 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 

    • குடும்ப தகராறு காரணமாக வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32).இவரது மனைவி புனிதா (25).இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கடந்த மாதம் 17-ந்தேதி குடும்ப தகராறு காரணமாக வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து பல்வேறு ஊர்களிலும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

    எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அழிந்து வரும் பனை மரங்களை காக்க பனை விதை நடும் திருவிழாவை தொடங்கியுள்ளோம்.
    • நாளொன்றுக்கு 1000 பனை விதைகள் என 10 நாட்களில் 10,000 பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் அகரம் விவசாய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விவசாய குழுவில் அகரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாய இளைஞர்கள் உள்ளனர். அகரம் விவசாய குழு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்ப துடன் அழிந்து வரும் பனை மரத்தை பாதுகாக்க 10,000 பனை விதைகளை தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் விதைக்கும் திருவிழாவை தொடங்கியுள்ளனர்.

    அகரம் கிராமத்தை சுற்றி யுள்ள தெண்பெண்ணை ஆற்றங்கரை படுகையின் ஓரத்தில் பனை விதைகளை குழுவினர் விதைத்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1000 பனை விதைகள் என 10 நாட்களில் 10,000 பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து அகரம் விவசாய குழு வின் செயலாளர் பெரியண்ண னிடம் கேட்டபோது, பனை மரத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், பனை சார்ந்த தொழிலாளர்கள் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று விட்ட காரணத்தாலும், செங்கல் சூளைகளுக்கு மரம் வெட்டப்பட்டதாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70 சதவீத பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சீரிய முயற்சியால் பனை மரங்களை வெட்ட தடை செய்யப்பட்டபோதும் தொடர்ந்து சில சமூக விரோதிகளால் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

    அழிந்து வரும் பனை மரங்களை காக்க பனை விதை நடும் திருவிழாவை தொடங்கியுள்ளோம். முதற்கட்ட மாக தெண்பெ ண்ணை ஆற்ற ங்கரையோரம் நடப்படும் பனை விதை யால மண் அரிப்பு தடுக்கப்படும் என்பதால் 10,000 பனை விதைகளை அகரம் தெண்பெ ண்ணை ஆற்றங்கரை யோரம் நடு கிறோம் என தெரிவித்தார்.

    ×