search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிபந்தனைகளை மீறிய   12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை-   கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தகவல்
    X

    நிபந்தனைகளை மீறிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை- கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தகவல்

    • 146.52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • ஜாமீன் நிபந்தனைகளை மீறிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: -

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, வெளி மாநில மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தற்போது வரையில் 33 ஆயிரத்து 145 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 84 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல 146.52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 56 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குட்கா, கஞ்சா கடத்தல் வழக்கில் மட்டும் 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதத்தில் கந்து வட்டி தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 13 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 20 கந்து வட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 68 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கொலை குற்றவாளிகள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் 146 பேர் மீது 109, 110 பிரிவில் வழக்குப்பதிவு செய்து உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஜாமீனில் வந்த குற்றவாளிகள், ரவுடிகள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், ஓசூர் உட்கோட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த், ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×