என் மலர்
நீங்கள் தேடியது "நாகபஞ்சமியையொட்டி கூழ் வார்த்தல் நிகழ்ச்சி"
- நேற்று 15 - ஆம் ஆண்டு நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெற்றது.
- அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மன் திருக்கோயில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி தினத்தில் நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று 15 - ஆம் ஆண்டு நாக பஞ்சமி திருவிழா உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை முதலே ஸ்ரீ நாகம்மனுக்கு விசேஷ அபிஷேகங்களும் நடத்தப்பட்டு மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, கூழ் பிரசாதத்தை வாங்கி சென்றனர்.
நேற்று தொடங்கிய இந்த திருவிழா உற்சவம், வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீ நாகம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று ஆராதனைகள் நடைபெறும். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, அம்மனுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்றைய தினமே கலச கரகமும் எடுத்து நாக அம்மனுக்கு உற்சவம் நிறைவேற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி ஜெகன்நாத் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.






