என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் அரிப்பை தடுக்கும் விதமாக   10 ஆயிரம் பனை விதை நடவு
    X

    மண் அரிப்பை தடுக்கும் விதமாக 10 ஆயிரம் பனை விதை நடவு

    • அழிந்து வரும் பனை மரங்களை காக்க பனை விதை நடும் திருவிழாவை தொடங்கியுள்ளோம்.
    • நாளொன்றுக்கு 1000 பனை விதைகள் என 10 நாட்களில் 10,000 பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் அகரம் விவசாய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விவசாய குழுவில் அகரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாய இளைஞர்கள் உள்ளனர். அகரம் விவசாய குழு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்ப துடன் அழிந்து வரும் பனை மரத்தை பாதுகாக்க 10,000 பனை விதைகளை தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் விதைக்கும் திருவிழாவை தொடங்கியுள்ளனர்.

    அகரம் கிராமத்தை சுற்றி யுள்ள தெண்பெண்ணை ஆற்றங்கரை படுகையின் ஓரத்தில் பனை விதைகளை குழுவினர் விதைத்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1000 பனை விதைகள் என 10 நாட்களில் 10,000 பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து அகரம் விவசாய குழு வின் செயலாளர் பெரியண்ண னிடம் கேட்டபோது, பனை மரத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், பனை சார்ந்த தொழிலாளர்கள் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று விட்ட காரணத்தாலும், செங்கல் சூளைகளுக்கு மரம் வெட்டப்பட்டதாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70 சதவீத பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சீரிய முயற்சியால் பனை மரங்களை வெட்ட தடை செய்யப்பட்டபோதும் தொடர்ந்து சில சமூக விரோதிகளால் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

    அழிந்து வரும் பனை மரங்களை காக்க பனை விதை நடும் திருவிழாவை தொடங்கியுள்ளோம். முதற்கட்ட மாக தெண்பெ ண்ணை ஆற்ற ங்கரையோரம் நடப்படும் பனை விதை யால மண் அரிப்பு தடுக்கப்படும் என்பதால் 10,000 பனை விதைகளை அகரம் தெண்பெ ண்ணை ஆற்றங்கரை யோரம் நடு கிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×