என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
    • வாகனத்தில் பின்னால் இருந்த ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்றுமாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தில் பின்னால் இருந்த ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

    எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்த அவர் மெதுவாக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.

    இதில் மழைவெள்ளம் அவரை கால்வாய்க்குள் அடித்து செல்லப்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே ஓடி வந்து அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இதனால் கால்வாய் மறுபுறம் வழியாக அவரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    மதுபோதையில் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவருக்கு போதை சற்று தெளிந்தது. கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்த அவருக்கு தலை, முகம், கால் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று முழு கொள்ளளவு நிரம்பிய யார்கொல் அணை நீர் வெளியேறியது.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றின் கரையில் இருக்க வேண்டாம் எனவும், ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வேப்பனப்பள்ளி, ஆக.4-

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் யார்கொல் என்னும் கிராமத்தில் கர்நாடக அரசு மார்க்கண்டேய நதி குறுக்கே சுமார் 120 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தடுப்பணை கட்டி உள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லையில் அமைந்துள்ளது.

    இந்த யார்கொல் அணையாஃனது தொடர் கனமழை காரணமாக முதன்முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. நேற்று முழு கொள்ளளவு நிரம்பிய யார்கொல் அணை நீர் நேற்று வெளியேறியது.

    120 அடி உயரத்தில் இருந்து மார்கண்டேயன் நதியில் நீர் சீறிகொண்டு தமிழகம் நோக்கி வந்து கொண்டுருக்கிறது. இதனால் இந்த பகுதியில் தமிழக எல்லை மார்கண்டயேன் நதி கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    யார்கொல் அணை நிரம்பியிள்ளதால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றின் கரையில் இருக்க வேண்டாம் எனவும், ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது முதல் முறையாக யார்கொல் அணை நிரம்பி வருவதால் இப்பகுதி சுற்றுவட்டார பகுதியில் கிராம மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டு உள்ளது.

    • திடீரென கால் தடுக்கி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.
    • துரிதமாக செயல்பட்டு மீட்டதால் உயிர் தப்பினார்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்றுமாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் முதியவர் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தில் பின்னால் இருந்த முதியவர் ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

    எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்த அவர் மெதுவாக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.

    இதில் மழைவெள்ளம் அவரை கால்வாய்க்குள் அடித்து சென்றது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே ஓடி வந்து அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இதனால் கால்வாய் மறுபுறம் வழியாக அவரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    மதுபோதையில் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவருக்கு போதை சற்று தெளிந்தது. கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்த அவருக்கு தலை, முகம், கால் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விசாரணையில் கால்வாய்க்குள் தவறி விழுந்தவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த கனகராஜ் (வயது 60) என்பது தெரியவந்தது.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
    • கிராமத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. அப்போது எட்டிபள்ளி கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் நீர் கரை புரண்டது.

    இந்த ஏரியில் இருந்து கால்வாய் மூலம் ஆற்றுக்கு நீர் கொண்டு செல்லப்படும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சின்ன பத்தளப்பள்ளி கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கிராமத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்ட னர்.

    தொடந்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து அதிகரித்துள்ள தால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியு ள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடைந்த இந்த கால்வாயை சீரமைத்து கிராம மக்களின் வீடுகளையும், உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த கோவில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி கரகங்கள் தலை கூடும் நிகழ்ச்சியின் போது, 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

    கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரி யம்மன் கோவில் திரு விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது.

    அதன்படி 169வது ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடந்தது. ஏழாவது நாளான நேற்று காலை 10 மணிக்கு, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்தூர், பெரியமுத்தூர், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி பொன்கரகமும், மற்றும் அவதானப்பட்டி மேம்பாலம் அருகில் தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்தனர். பின்னர் கோயில் பின்புறம் 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடு மற்றும் கோழிகளை சமைத்து, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்தனர். இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆதார் எண்ணை இணையதனம் மூலமாவும், கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்யலாம்.
    • சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலகத்தில் மனுவாக சமர்ப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமு கர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை நேரடியாக இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்க ளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில், வாக்காளர்கள் விரும்பும் பட்சத்தில், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்து கொள்ளலாம். ஆதார் எண்ணை இணையதனம் மூலமாவும், கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்தும், நேரடியாக இணைத்து கொள்ளலாம்.

    மேலும், இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் இல்லங்க ளுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை பெற்று, இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் பதிவு மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றிற்கு புதிய படிவங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளரை சேர்த்திட படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர்களின் முகவரி மாற்றம், பதிவு திருத்தம், புதிய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிக்க படிவம் 8 பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதே போன்று புதிய இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திட ஏதுவாக ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இனி ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல் தேதியினை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதன் அடிப்படையில் 17 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்களது விபரங்களை படிவம் 6ல் பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில், 18 வயது பூர்த்தியாகும் நாளில் அவர்களது பெயர் நேரடியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நான்காம் தேதி முதல் 2023ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை தொடங்கவுள்ளது.

    இதன்படி, தொலைவிலுள்ள வாக்குச்சாவடிகளை திருத்துதல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.

    மேற்கண்ட பணிகள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை இருப்பின் வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்கு பதிவு அலுவலர் அலுவலகத்தில் மனுவாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இந்த கூட்டத்தில் கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், வருவாய் கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி சதீஸ்குமார், ஓசூர் தேன்மொழி, தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அதிமுக சார்பில் முன்னாள் எம்பி.,பெருமாள், நகர செயலாளர் கேசவன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால், காவடி எடுத்தனர்.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் பகுதியில் ஆடி 18-ஐ முன்னிட்டு 31-ம் ஆண்டு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகபெருமான் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் ஆடி மாதம் முதல் முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால், காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, உடல் முழுவதும் எழுமச்சம்பழம் கோர்த்தும், வேல் அலகு குத்தியும், தேர் இழுத்தும் ,கரகம் எடுத்தும் பம்பை , தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அரோகரா, அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர்.

    முன்னதாக சுவாமிக்கு 2 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கங்கை பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன.

    இவ்விழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாவும், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியின் துணை பேராசியருமான கோவிந்தசாமி மற்றம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும்நிலையில், ஒசூர் மாநகரின் தாழ்வான பகுதிகளான கேசிசி நகர்,பசுமை நகர் மற்றும் குறிஞ்சி நகர், ஜிஆர்டி சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேயர் சத்யா ,கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்ட அவர், மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை முடுக்கி விட்டார்.

    இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்பி ரமணியன், துணைமேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் யசஷ்வினி மோகன், மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே பி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது50). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றுமதியம் ஜெயபிகாஷ் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றார்.

    அந்த சமயம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 425 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அஞ்சுவாடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்குரிய டாட்டா ஏசி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 425 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சேஷல் வாடி பகுதியைச் சேர்ந்த சசிகண்ணன் (வயது46), அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி (28) மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தனுஷ் (49) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதற்கு பயன்படுத்திய 1.20 லட்சம் மதிப்புள்ள டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடத்திச் செல்ல முற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கேட்டபோது மின்சார பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பித்து ஓடி விட்டனர்.
    • இது சம்பந்தமாக செந்தில்குமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த மரிக்கம்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மின் கோபுர அயன் போல்ட் மின்சாதன பொருட்களை வடக்கம்பட்டி - ராயக்கோட்டை சாலையில் மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரத் துறையினர் போட்டு வைத்துள்ளனர்.

    இதனை வில்லாரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்பரசன், பாயூர் பகுதியைச் சேர்ந்த மாது உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் நேற்று அந்த வழியாக வந்தபோது டிராக்டரில் மின்சார துறைக்கு சம்பந்தப்பட்ட அயன் போல்டுகளை ஏற்றிக்கொண்டு தப்பித்து செல்ல முயன்றனர்.

    அப்போது மின்சாரத்துறையில் பணிபுரியும் செந்தில்குமார், கடத்திச் செல்ல முற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கேட்டபோது மின்சார பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பித்து ஓடி விட்டனர்.

    இது சம்பந்தமாக செந்தில்குமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 15 பேரில் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

    • தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளிலும் ஆடிபெருக்கு விழா கொண்டாடினார்கள்.
    • நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தினர்

    கிருஷ்ணகிரி,

    பாரத போர் முடிந்து ஆடி 18-ம் நாள் கங்கை, காவரி உள்ளிட்ட பெருநதிகள் முதல் சிறிய ஆறுகளில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இதனால் ஆடி பெருக்கு விழாவை தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகன்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் அம்மன் கோயில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபடுவர்.

    இந்த ஆண்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு 1700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் 190 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் 750 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இன்று ஆடிபெருக்கு விழாவில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள், இதனையொட்டி அணைப் பகுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அணைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நுழைவாயில் பகுதியல் நிறுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தது.

    அதே போல் நுழைவு சீட்டு வழங்கும் பகுதியிலும் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளது. விழாவினையொட்டி அணை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கவும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளிலும் ஆடிபெருக்கு விழா கொண்டாடினார்கள். கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது இந்த விழாவினையொட்டி எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    தருமபுரி மாவட்டத்திலும் பென்னாகரம்,இருமத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தினர். ஏராளமான புதுமண தம்பதிகள் ஒன்று கூடி பெண்களுக்கு தாலி மாற்றி வழிபட்டனர்.

    ×