என் மலர்
உள்ளூர் செய்திகள்

அத்திப்பள்ளம் பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ பால தாண்டாயுதபாணி கோவிலுக்கு தேர் இழுத்து வந்த பக்தர்கள்.
அத்திப்பள்ளம் பகுதியில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் திருவிழா
- முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால், காவடி எடுத்தனர்.
- தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் பகுதியில் ஆடி 18-ஐ முன்னிட்டு 31-ம் ஆண்டு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகபெருமான் கோவில் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆடி மாதம் முதல் முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால், காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, உடல் முழுவதும் எழுமச்சம்பழம் கோர்த்தும், வேல் அலகு குத்தியும், தேர் இழுத்தும் ,கரகம் எடுத்தும் பம்பை , தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அரோகரா, அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர்.
முன்னதாக சுவாமிக்கு 2 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கங்கை பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாவும், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியின் துணை பேராசியருமான கோவிந்தசாமி மற்றம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






