என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊருக்குள் புகுந்த மழைநீர்"

    • வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
    • கிராமத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. அப்போது எட்டிபள்ளி கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் நீர் கரை புரண்டது.

    இந்த ஏரியில் இருந்து கால்வாய் மூலம் ஆற்றுக்கு நீர் கொண்டு செல்லப்படும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சின்ன பத்தளப்பள்ளி கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கிராமத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்ட னர்.

    தொடந்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து அதிகரித்துள்ள தால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியு ள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடைந்த இந்த கால்வாயை சீரமைத்து கிராம மக்களின் வீடுகளையும், உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×