என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.
முதன்முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டிய யார்கொல் அணை
- நேற்று முழு கொள்ளளவு நிரம்பிய யார்கொல் அணை நீர் வெளியேறியது.
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றின் கரையில் இருக்க வேண்டாம் எனவும், ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேப்பனப்பள்ளி, ஆக.4-
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் யார்கொல் என்னும் கிராமத்தில் கர்நாடக அரசு மார்க்கண்டேய நதி குறுக்கே சுமார் 120 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தடுப்பணை கட்டி உள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த யார்கொல் அணையாஃனது தொடர் கனமழை காரணமாக முதன்முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. நேற்று முழு கொள்ளளவு நிரம்பிய யார்கொல் அணை நீர் நேற்று வெளியேறியது.
120 அடி உயரத்தில் இருந்து மார்கண்டேயன் நதியில் நீர் சீறிகொண்டு தமிழகம் நோக்கி வந்து கொண்டுருக்கிறது. இதனால் இந்த பகுதியில் தமிழக எல்லை மார்கண்டயேன் நதி கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
யார்கொல் அணை நிரம்பியிள்ளதால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றின் கரையில் இருக்க வேண்டாம் எனவும், ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது முதல் முறையாக யார்கொல் அணை நிரம்பி வருவதால் இப்பகுதி சுற்றுவட்டார பகுதியில் கிராம மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டு உள்ளது.






